ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2015 11:05
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது. கடலூர் அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது. அதனையொட்டி காலை 9:00 மணிக்கு குயவர் வீதியில் உள்ள விநாயகர் கோவிலிலிருந்து பக்தர்கள் பால்குடங்களை ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.காலை 9:30 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், காலை 10:30 மணிக்கு பால்குடம் அபிஷேகம் நடந்தது.