கடலூர்: சூரக்குப்பம் காலனியில் உள்ள சூரவக்ர காளியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் காலனியில் உள்ள சூரவக்ர காளியம்மன் மற்றும் நாகம்மன் கோவிலில் சாகை வார்த்தல், தீ மிதி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் மிளகாய் துõள் அபிஷேகம் செய்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை தீமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.