Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலியின் யோக ... கைவல்ய பாதம்
முதல் பக்கம் » யோக தீபம்
ஓம் மந்திர வாக்கிய தத்துவங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2015
04:05

அகார  வரிசையிலே அடங்குபவை  

தூல உடம்பு, பரு உடம்பு, பெண், ரிக் வேதம், கார்க்கபத்யாக்னி, ஹரஸ்வம், பல்லவி, பாதம், புத்தி, ரஜோ குணம், சிவப்பு, பூரகம், நாதம், கிரியா சக்தி, பிராம்மணி, பிரம்மா, கடந்த காலம்.

உகார வரிசையில் அடங்குபவை

சூக்கும உடல், நுண்ணுடல், ஆண், யஜுர் வேதம், தட்சிணாக்னி, தீர்க்கம், அனுபல்லவி, நாபி, மனம், தமோ, கபிலம், கும்பகம், பிந்து, பிந்து சக்தி, வைணவி, விஷ்ணு, நிகழ்காலம்.

மகார வரிசையில் அடங்குபவை

காரண உடல் என்ற லிங்க உடல், அலி,சாம வேதம், ஆஹவனியாக்னி, ப்ளுதம், சரணம், சிரசு, அகங்காரம், சத்வம், கருப்பு, ரேசகம், கலை, ஞான சக்தி, ரௌத்ரி, ருத்ரன், எதிர்காலம்

இவ்வாறாய் இன்னும் அநேகம் படைப்புலகில் ஓம் என்ற சப்தம் உருவம் ஒலியில் யாவும் கலந்து நிற்கின்றன.

சூத்திரம் 33

மைத்ரீ கருணா முதிதோ பேக்ஷாணாம்  ஸுக து:க்க  புண்யா
புண்யவிஷயாணாம் பாவனாதச்சித்த ப்ரஸாதனம்

இன்ன இன்ன , அசுக = துக்கம் உள்ளவர்களை, சுக = சுகம் உள்ளவர்களை புண்ணிய என்றால் புண்ணியம் செய்தவர்களை, அபுண்ணிய என்றால் -பாவம் செய்கின்றவர்களை,

விஷயானாம் - விஷயமாகயுடையவர்கள், இப்படிப் பட்டவர்களை

அதாவது சுகம் உடைவர்களை, பாவ செய்கின்றவர் களை, புண்ணியம் செய்கின்றவர்களை, விஷயமாக யுடைய, இப்படிப்பட்டவர்களுடைய

மைத்ரீ = சிநேகம் என்பது, நட்புடைய அதாவது விஷயமாக கொண்ட

கருணா = கருணை,தயை, அல்லது காரூண்யம், இரக்கமுடைய என்று சொல்லலாம்.

முதிதோ = சந்தோஷம்,

பேசஷாணா = உதாசீனம், நீக்கிவிடுவது போன்ற

பாவனாத = எண்ணத்தால் (அதுபோன்று நடிப்பது)

இப்படிப்பட்டவர்களின் விஷயங்களை நீக்கிவிட்டால் அதாவது பாவம் பண்ணியவன், புண்ணியம் பண்ணியவன்.  நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன் என்று இல்லாமல் அவற்றை  நீக்கி விட்டால்,

சித்த ப்ரஸாதனா = மனம் தெளிவு ஏற்படும். எதனால் மைத்டக என்ற குணங்களைக் கொண்டு அவற்றை நீக்கி விட்டால், மனத் தெளிவு உண்டாகும். எல்லோரையும் ஒரே மாதிரியாக எண்ணச் செய்யும்.

எவை (முன்னேற்றத்திற்கு) தடையாக இருக்கிறது என்று பார்த்து விட்டால் மனத்தெளிவு, சித்தத்தெளிவு ஏற்படும். இப்போது ஒவ்வொரு உபாயமாகச் சொல்கிறார். இந்த இடத்தில் இயமம், நியமம், வருகிறது. எப்படி நடக்க வேண்டும் என்பது இதுவும் ஒன்றுதானே. ஆகவே முழுமையாகச் சொல்ல வேண்டும் என்றால்;, சித்தத்தை சுத்தம் செய்யாவிட்டால் அசூயை, பொறாமை போன்றவை வளர்கிறது. சித்தம் சுத்தமாக இருக்க வேண்டுமானால் இப்படியெல்லாம், நினைக்கக் கூடாது, அதைப் பற்றி கவலைப்படாதே! எல்லோரையும் நல்லவனாக நினைக்க வேண்டும். சுகமுள்ளவர்களிடம் பழக வேண்டும். ஆனால் யாரும் சுகமுள்ளவர்கள் இல்லை. துக்கமுள்ளவர்களிட மிருந்து விலக வேண்டும். உறவு வேண்டாம், நட்பு வேண்டாம். பாவம் செய்தவர்களை உதாசீனம் செய்ய வேண்டும். அதிக ஆசையுள்ளவர்களிடமும், அது மனைவியானாலும், பிள்ளையானாலும் சரி அவர்களிடமிருந்து விலக வேண்டும்.

யாரையும் ஏற்ற -இறக்கத்துடன் நினைக்க வேண்டாம். அவை மனத்தில் வளர்ந்து  தீய எண்ணங்களை குடியேற்றி விடும். அப்படிப்பட்ட மனமுடையவனுக்கு சமாதி உண்டாகாது. எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலை வந்தால் சமாதி கூடும். ஆக இப்படிப் பார்ப்பதும் ஒரு உபாயம் தான் என்று சொல்கிறார். எப்படிப்பட்டது என்றால் உடம்பை மட்டும் நேராக வைத்து கொண்டு மூச்சை இழுப்பதால் மட்டுமல்லாமல் குணாதிசயங்களைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சமாதி கூடும். குணாதிசயங்கள் சரியாக இல்லாவிடில் இப்படிப்பட்ட உபாயம்  உனக்குத் தொணீயாமல் போய் விடும். ஆகவே எதனிலும் சமமாகப் பார்க்க வேண்டும்.

அடுத்து சித்தம் சுத்தமாகும் வழி பார்க்கும் போது எண்ணங்கள் சுத்தமானால் சித்தம் சுத்தமாகும். அதற்கு உபாயம் என்ன என்று பார்த்தால், பிறருக்கு துன்பம் தரக் கூடாது. முடிந்தவரை பிறர் துக்கங்களைப் போக்குவேன் என்று சங்கல்பம் செய்ய வேண்டும். பிறர் மனதை கஷ்டபடுத்தக் கூடாது. அவன் எப்படியானவனாலும் சரி அதை நாம் பார்க்கக் கூடாது. ஏனென்றால் இது உன்னுடைய விஷயம். நீ தெளிவடையக்கூடிய விஷயம்.

பிறர் குற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், சித்தம் சுத்தமாகாது. சமாதி கைகூடாது. ஞானம் அற்றவனாக ஆகிவிடுவாய். யாரைப் பற்றியும் நினைக்காமல் அவர்களின் வழியில் போகாமல் இருந்தால் இது சம்பந்தமான எந்த விஷயமும் வராது. அதனால் ஏற்படும் பாவம் வராது. உன்னுடைய சித்தம் சுத்தமாகிவிடும். தீய எண்ணங்கள் சித்தத்திலிருந்து சிறிது, சிறிதாக வெளியேறும். இது ஒரு உபாயம்.

நல்லோரிடமும், புண்ணியம் செய்தவர்களிடமும் பொறாமைக்குப் பதிலாக அன்பு செலுத்த வேண்டும். நம்மை விட எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கும் எண்ணமும் பொறாமை தான். இறைவனைத் தவிர நமக்கு உயர்ந்தவர் எவருமில்லை. நம்மைத் தவிர தாழ்ந்தவரு மில்லை. நாமே தாழ்ந்தவர்கள் எனும் போது பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது.

உயர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் அவர்களை புண்ணியஸ்தர்களாக எண்ணி அன்பு கருதி நல்லவிதமாக நினைக்கும் போது சித்தம், சிறிது சிறிதாக சத்வ குணத்தைப் பற்றி நின்றால் ஏகாக்ரம் என்ற நிலை ஏற்படும். ஏகாக்ரம் எண்ணம் என்றால் ஒன்றிய மனத்தைப் பதிக்கின்ற எண்ணம் வரும். அப்படி வருகின்ற போது என்னவாகும் என்றால் ராஜோ, தாமோ, ஒடுங்கி விடும்.

மைத்ரீ=  (பாகுபாடு இல்லாத குணம்); என்ற உபாயங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக வேதத்தில் இந்திரியாணாம் பலம் பிராணன் தோஷ விக்ஞானனே என்று இந்திரியங்களைப் பற்றி கூறுகிறது. இந்திரியங்களின் வலிமை பிராணன். இந்திரியங்களே பிராணனாக இருக்கிறது. பஞ்ச பூத சேஷ்டைகள், அதனால் வரக்கூடிய துன்பங்கள் இருக்கின்ற தல்லவா? அது இந்திரியங்களே, அதனால்தான் ரிஷிகள் பிராணானைக் கட்டுப்படுத்தி விட்டால் இந்திரியங்கள் கட்டுப்பட்டு விடும். இந்திரியங்களின் ஆதிக்கத்திலிருந்து  நாம் விடுபடலாம்.  ஆகையால் பிராணானைக் கட்டுப்படுத்த வேண்டும். இது அடுத்த உபாயம்.  
      
சூத்திரம் :34

பிரச்சர்தன விதாரணாப்யாம்
வா பி;ராணஸ்ய:ஃ

பி;ராணஸ்ய - வாயுவினாலான

பிரச்சர்தன - உள் நின்ற வாயுவை வெளிவிடுதல் (யோக முறைப்படி)

விதாரணாப்யாம் - உள்ளிருத்தி கும்பகம் செய்தல். ஆனால் பூரகத்தைச் சொல்லவில்லை.

அதாவது உள் நின்ற வாயு என்றால் உள்ளேயிழுக்கின்ற வாயுவை (பூரகத்தை) சொல்வது.

அந்த வாயுவைக் கும்பகம் பண்ணிய பிறகு வெளிவிடுகின்ற (ரேசகம்) தான் பிரச்சர்தனாகும். பூரகம், ரேசகத்தை ஸ்ரீ பதஞ்சலி முனிவர் அப்படியே மாற்றிப் போட்டு நமக்குச் சொல்கிறார். அதாவது ரேசம் பூரகம் என்பதை பூரகம் ரேசம் என்று வரிசைப்படுத்துகிறார்.

அடுத்தபடியாக

விதாரணா - உள்ளே இழுத்த வாயுவைக் கும்பகம் செய்வது.

இப்படி மூச்சுகளைப் பயன்படுத்தினால் மனம் கட்டுபடும். எப்படியென்றால் வெறும் மூச்சை மட்டும் விட்டால் போதுமா? அவை யாவும் சித்தத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது சூட்சமமான பல விஷயங்களை வியாதிகளை அது வெளியேற்றுகிறது.

வெறும் மூச்சை மட்டும் நினைக்காமல்   பிராணன் உள்ளே வருகிறது என்றும் வெளியேற்றும் போது பிராணன் வெளியேறுகிறது என்று உணர்வாலும், நினைவாலும்; இவற்றைச் செய்யும்போது சித்தப் பிரசாதம் என்ற மனத்தெளிவு உண்டாகும்.

மைத்ரீ, பிராணனை அடக்குதல், மற்றும் பிராணாயாமத்தால் இந்த உடம்பு இந்திரியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு விலகுவதினால் தியானம் கைகூடும். இந்திரியங்கள் என்றால் என்ன? என்று பிரித்து பார்க்கும் போது வரம் பொருந்திய முஷ்டி. முஷ்டி என்றால் வலிமையான. கை, கால் மற்றும் விசேஷத்திற்கு வரும் போது தலை, மார்பு, புஜம், முதுகு ஆகும். புலன்களால் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பதற்கு, வலிமையான கைகள் (முஷ்டி) அடிப்பதற்கோ, உதைப்பதற்கோ வேண்டும். இவைகள் அகங்காரத்தினால் வலிமையினால் (முஷ்டி) வருகிறது, உதாரணத்திற்கு திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் வரும் போது கதாநாயகன் உடம்பில்; உள்ள அனைத்து பாகத்தை பயன்படுத்தி எதிரிகளை அடிப்பதை பார்த்திருக்கிறோம். அவை எதனால் ஏற்படுகின்றன என்றால் இந்த பிராணனின் விளையாட்டே. இந்திரியங்களின் வலிமையே பிராணன்களாகும்.

ஒரு வியாதிக்காரனுக்கு உடல் கட்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கை,கால், இடுப்பு, புஜம் அனைத்தும் வலிமையாக இருப்பதாகத் தெரியும். ஆனால் உண்மையில் அவனுக்கு வலுவிருக்காது. ஏனென்றால் பிராண சக்தி குறைவாக இருக்கும். எந்தவிதமான வேலையையும் செய்ய முடியாது. பிராணனை இயக்குவதால் தான் உடம்பில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் வலிமை (முஷ்டி) கிடைக்கும். பிராணனே எல்லாமாக இருக்கிறது. பிராணனுக்கு அடுத்தபடியாக சக்தி ஒன்று இருக்கிறது. ஆகையால் பிராணனோடு சக்தி இணைந்து வரக்கூடியதை நாம் கட்டுப்படுத்துகிறோம். மூச்சுக் காற்றால் பிராணனைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு வழி அவ்வளவுதான். பிராணாயாமம் மட்டும் தான் யோகத்திற்கு ஒரே வழி என்றில்லை. பிராணாயாமமும், ஒருவகையான வழியாகும் அவ்வளவுதான். வலிமையான ஒருவன் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு கவனித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் பார்த்தால் தெரியும் அவருக்கு உடனடியாக நிற்க முடியாது. என்னென்றால் அவருக்கு இரத்த ஒட்டம் தடைப்பட்டியிருக்கும். ஆனால் நாம் சொல்வோம்; இரத்த சோகை, இரத்தஓட்டக்குறைவு,  சூகை பிடித்திருக்கு என்று வழக்கத்தில் சொல்வோம். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று பார்த்தால் அவருக்கு இரத்தம் செல்லும் நரம்புகள் அழுத்தியிருக்கிறது.

நாடி, நரம்புகளும் ஒன்று தான். நம்முடைய நாடி, நரம்புகள் 72,000 நாடி, நரம்புகள் வலுவாக இருந்து அங்கே இரத்தம் வந்து கலந்து பிராணன் இருந்தால் தான் வலிமை பெற முடியும். ஆகவே இங்கே பிராணன் நன்றாகயிருப் பதற்கு நாடி, நரம்புகள், இரத்தம் முக்கியம். அப்போது தான் வேலை செய்யும்.

ஒருவன் 100 ஆண்டுகள் தொடர்ந்து உட்கார்ந்துக் கொண்டியிருந்தாலும், அவனுக்கு எந்தவிதமான வலியும், இரத்த ஓட்டத்தடையும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அவன் நாடிசுத்தி மூலம் பிராணன் நன்றாக இயங்குவதற்கு நாடிகளை முதலில் சரிப்படுத்தி பின்பு நரம்புகளை வலுவேற்றி இருக்கிறான். இந்த நாடிகள் வயது ஏற ஏற  வலுவிழந்து அவன் வீட்டில் அவனுக்கு மதிப்பில்லாமல் போவதற்கும், ஆணாதிக்க மேன்மை குறைவதற்கும் காரணமாகிறது.

பிராணாயாமத்திலும், நாடி சுத்தியிலும் பயிற்சி செய்து வந்தால் இந்த நாடி, நரம்புகள் 100 வயதிலும் நன்றாக இருக்கும். எந்த உள்ளுறுப்புகளும் கெடாமல் இருக்கும். அதே சமயத்தில் நாடி, நரம்புகள், இரத்த ஓட்டம், பிராணன் ஆகியவைகள் நன்றாக இருந்தாலும்; சித்தம் சரியாகயில்லாமல் இருந்தாலும்;, மனம் சாய்ந்து போயிருந்தால் நாடி, நரம்புகள், இரத்தம் ஓட்டம், பிராணனின் பலம் அனைத்தும் வீணே.

ஆகவே எண்ணம் என்ற மனம், அல்லது மனம் என்ற எண்ணம், அறிவு என்ற புத்தி, சித்தம் என்ற மனம், சித்தம் என்ற ஆன்மா,  இவையனைத்தும் சரியாக வைத்துவிட்டால் அவனுக்கு எல்லாமே இயலும். 100 வயது, 200 வயதானாலும் அழகாக உட்கார்ந்திருப்பார். எல்லாம் புரியும். 15 வயது மற்றும் 40 வயது உள்ளவர்களைப் போல் அவன் மனபலத்தால் செய்ய முடியும். இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் மனம் என்ற கருவியை எப்படிச் சுத்தமாக வைத்து சித்தம் மூலம் ஆன்மாவைப் பார்த்து உணர்ந்து இறைவனோடு இணைவது, கலப்பது, அதற்குத் தியானம், யோகம், தேவையாயிருக்கிறது.

யோக சூத்திரத்திலே இவ்வாறாகப் பல உத்திகள், எத்தனையோ விஷயங்களைக் கொண்டது. ஆகையால் எல்லா சூத்திரங்களையும் கற்க முடியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட சில சூத்திரங்களையாவது கற்று அதன்படி நடந்தால் நமக்கு யோகம் கைகூடும்.

பயிற்சி மட்டுமல்லாமல் பிற இதர விஷயங்களில் மன விகாரங்களில் மூழ்கிக் கிடக்காமல் மனதை எதிலும் சாய்க்காமல் இறைவனை அடைவதிலேயே லட்சியமாக இருந்தால் மிக எளிதில் யோகம் அதுவாக வந்துவிடும்.

சூத்திரம்: 37

வீத ராக விஷயம் வா சித்தம்:

வீத ராக - என்றால் ஆசையை முழுதும் விலக்கியவர்கள்

ராகம் - ஆசை

ஆசையை முழுதும் விலக்கியவர்கள் யார் என்று சொன்னால், ரிஷிகள், மகரிஷிகள், பிரம்மரிஷிகள், சுகபிரம்மம், வியாசர் போன்றவர்கள் முழுவதும் ஆசைகளை நீக்கியவர்கள். கொஞ்சம் கூட ஆசையே இல்லாதவர்கள்க்ஷ

ரிஷிகளின் வரிசைகளில். சுகப்பிரம்மம் தான் முருகனின் அவதாரம் என்பர். இப்படிபட்டவர்கள் ஆசைகளை முழுவதும் நீக்கியவர்களாக இருப்பதால் இவர்களைக் கூட நீங்கள் மனதில் தியானப்பொருளாக வைத்துக் கொண்டால், அல்லது நினைத்துக் கொண்டால் அவர்களுடைய மேன்மை வந்துவிடுகிறது. அவர்களை முழுவதுமாக நினைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.

அவர்களின் முகம், அல்லது அவர்களின் வாகனத்தையோ, அவர்களின் குடிகொண்டிருக்கும் ஸ்தலத்தையோ, எதுவாயிருந்தாலும் அதனை நினைத்து அதில் சித்தத்தை நிலைக்கச் செய்ய வேண்டும். அதற்கு முக்கியமானது ஆசைகளை நீக்க வேண்டும். ஆகவே தான் சுலபமான உத்திகள் என்று சிலவற்றை ஸ்ரீ பதஞ்சலி முனிவர் நமக்கு கூறும்போது முற்றும் ஆசையை துறந்த இரு ரிஷிகளை நினைத்தால் போதுமானது சித்தம் நிலை பெற்றிடும் என்றுரைக்கிறார்.  

சூத்திரம்: 38

ஸ்வப்ன நித்ரா ஜ் ஞானலம்பனம் வா

ஸ்வப்ன - கனவில் வருகின்ற அரிய காட்சிகள்

நித்ரா - உறக்கம் என்ற சுழுத்தியில் எழுகின்ற சுழுமுனை. இதன் மூலம்தான் உறக்கம் வருகிறது.

உறக்கத்தில் நாம் கண்ட பல காட்சிகளெல்லாம் தெரியும். கனவு காணும்போது அங்கே மனம் மேலே ஏறி நின்று கொண்டிருக்கிறது. உடம்பிலிருந்து சற்று கீழே இறங்கி சித்தத்தின் வழியே ஆன்மாவைப் பார்த்து இவனுடைய பூர்வத்தையெல்லாம் பார்த்து, பூர்வ புண்ணியங்களையெல்லாம் பார்த்து இவன் அனுபவித் ததைப் பார்த்து இவனுடைய சமஸ்காரங்களைப் பார்த்து, வெறுப்பு, விருப்பு, இவனுடைய சாதனை, தோல்வியைப் பார்த்து, முடியாதது, முடிந்தது இவற்றையொல்லம் அந்த மனம் பார்க்கிறது. அந்த மனம் தான் அப்போது ஆள்கிறது.

நாம் அப்போது  மனத்தின் ஆள்கையில்தான் இருக்கிறோம்.(அல்லது)சுழுத்தியின் ஆதிக்கத்திலிருக்கிறோம். இங்கு  அது மட்டுமல்ல மனம் எதைக் கண்டதோ, அந்த சுழுத்தி எதைக் கண்டதோ, ஒரு நாடி அதைப் பார்த்தது. அதிலிருந்துதான் ஒரு விருத்தி உண்டாகிறது. அந்த விருத்திதான் நாம் பார்த்ததை நினைவு கூர்கிறது. சுழுத்தியை நமக்கு அடையாளம் தெரியாது. அதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்த மனத்திற்கு ஒரு அவஸ்தையை கொடுத்திருக்கிறது. நினைவகத்தை ஏற்படுத்தி அதுதான் மறுநாள் நமக்கு விழிப்பு நிலையில் என்று சொல்லக்கூடிய ஜாக்கிரதா அவஸ்தையில் (நனவு நிலையில்) ஒன்று கூட நழுவ விடாமல் அப்படியே காட்டுகிறது.

எனவே உறக்கத்தில் வருகின்ற காட்சியை வஸ்துவை சித்தம் கைக்கொள்ளுமானால் அதாவது உன் ஆன்மீகப் பயிற்சியினால் அடிமனத்தில் எழுகின்ற நல்ல கனவுகள், இறைக்காட்சிகள், புண்ணிய ஸ்தலங்கள் ஆகியவை உங்களை விட்டு ஒருபோதும் மாறாமல் உங்களுக்குள் இருந்து ஆனந்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

ஏனென்றால் உங்களுக்கும் அதற்கும் அக்காட்சி சம்பந்தமில்லாததாக வந்திருக்கும். அது  உங்களுடைய ஞானத்தின்பால், உங்களின் பூர்வ பலத்தால், அவைகள் அங்கே வெளியேறி சித்தத்தில் நிற்கின்றன. ஆக அதில் கூட மனதை வைத்தால் போதும் சித்தத்தை  அது நிலை நிறுத்திவிடும். ஏனென்றால் அதை நினைத்துக் கொண்டிருந்தால் கூட மனம் முழுவதும் அந்த நிகழ்ச்சியை நினைக்கிறதல்லவா?

மனத்தை எப்படியெல்லாம் நிலை நிறுத்தலாம், சித்தத்தை எப்படியெல்லாம் நிலைநிறுத்தலாம் என்பதை நினைத்துக் கொண்டு தியானத்தில் இருக்கும்போதும், உறக்கத்தில் இருக்கும்போதும், எந்த நிலையிலும் யோகம் செய்யலாம்.    

சூத்திரம்: 41

க்ஷீண வ்ருத்தேரபிஜாதஸ்யேவ:
மனோ க்ரஹீத்ரு க்ரஹண
க்ராஹ்யேஷீ தத்ஸ்த்தததஞ்ஜனதா ஸமாபத்தி:

க்ஷீண வ்ருத்தே - விருத்திகளை பலம் இழக்கச் செய்வது. (பலம் இழந்து விடும்.)

விருத்தி என்றால் எழுந்த,

ஆகவே க்ஷீண வ்ருத்தி என்றால் என்ன பலத்தை இழக்கச் செய்யுமென்றால்  உடம்பு பலத்தை மட்டும் சொல்லவில்லை. அதை ஆசனத்தைக் கொண்டு சரிசெய்து விடலாம். ஏனென்றால் நாம் ஆசனம் செய்து கொண்டிருக் கிறோம். ஆகவே மனதைப் பற்றித் தான் சொல்லியிருப்பார்.

மனம் சித்தத்தைச் சார்ந்திருப்பதால் சித்தத்தைப் பற்றிச் சொல்லியிருப்பார். எனவே மனம் எண்ண இயல்புகளோடு இருப்பதால் முக்குணத்தைப் பற்றி இருக்கும். அவை தமோ, ரஜோ, சத்வ  என்ற மூன்று குணங்கள் இருக்கின்றன. இதில் முதலிலே தமோ, ரஜோ வலுவிழந்த நிலையில், சித்த மனம் என்பது அறிவு, புத்தி, மனம், சித்தம் என்ற வாணீசையில், சித்தமானது எப்படி  உருவாகிறது என்றால் எப்போது நாம் இந்த உலக விஷயங்களிலிருந்து விலகி தனித்து நிற்கும் போது தான் சித்தம் தனியாக இருக்கும். மற்றபடி சித்தமும்;, மனமும் கலந்திருக்கும்.

இவை ஒன்றை ஒன்று பற்றி இருப்பதால் நமக்கு எது என்று தெரியாது. சித்தத்தைச் சுத்தமாக்குவது என்பது வேறு. அதாவது மனித உணர்விலிருந்து மாறியிருக்கும் போது தான் அது நடக்கும். மற்றபடி உடம்பு இருக்கும் போது அவை ஒன்றாகயிருக்கும். உடம்பிலிருந்து கட்டுண்டுடிருப்பதிலிருந்து தனியாக சமாதி நிலையிலே இருக்கும்; போது சித்தத்திலிருந்து  வரக் கூடிய உணர்வைத் தான் சித்த மனம், சித்தஸ்ய என்று கூறுகிறார்.

அபிஜாதஸ்ய - இயற்கையில் சுத்தமான மனம்,

நாம் ஏற்கனவே (ஆரம்பத்தில் துடய்மையாக இருந்த நிலை) சுயமாக இருந்திருக்கிறோம். அதைத் தான் மகரிஷி சொல்கிறார்.

யேவ: - ஸ்படிகம் போன்ற மணி போன்ற

அதாவது ஸ்படிகம் என்று சொன்னால் களங்கமற்ற ஒரு கல். எல்லா கற்களையும் எடுக்கலாம் அதில் எதாவது ஒரு களங்கமிருக்கும். ஸ்படிகம் என்பது எந்த களங்கமும் இல்லாது ஒளியை அப்படியே உள்ளவாறே வெளியிடுவது.

ஆகவே அந்த ஸ்படிகத்தில் எந்த நிறமோ, எந்த குணங்களோ பட்டவுடன் அதுவாகவே மாறிகிறது.

க்ரஹீத்ரு   ஆன்மாவிடம்,

க்ராஹயே  என்றால் விஷயங்களிலிருந்து

அதாவது அனுபவத்திற்கான விஷயம் அதாவது நான் பேசிக் கொண்டிருக்கின்ற விஷயம், (குதஞடீஞுஞிt) இது வருவதற்கு எது காரணியாக அமைகிறது? இந்திரியங்கள். இதிலிருந்து வருகின்ற அனுபவங்கள், செயல்பாடுகளிலும் தத்ஸத் அவற்றிலே இணைந்து தத்ஞ்ஜனதா - மேற்கண்ட விஷயங்களாகப் பின் தொடர்கிறது. நம்முடைய இயல்பான குணம் அதாவது முற்பிறவி என்று சொல்லலாம். அல்லது ஆரம்ப நிலை என்ற சுயத்தைச் சொல்லலாம்,  ஆக எது என்று தெரியாது.

நாம் எந்த பிறவியிலிருக்கிறோம். நாம் எத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறோம். இதுவும் நமக்குத் தெரியாது. பல பிறவிகளுக்கு முன்னே இறைவன் நமக்கு முதலில் தோற்றம் கொடுத்து அனுப்பியிருக்கின்ற போது அந்த முதல் தோற்றம் சுயமாகவிருந்தோம். ஸ்படிகம் போல் நமது மனமிருந்தது. பிறவிகள் மாற மாற நம்முடைய சித்தத்தில் அனுபவங்கள் ஏற்பட்டு அதன் காரணியாக இருக்கின்ற பஞ்சேந்திரியங்கள், தன்மாத்திரைகள்,கர்மேந்திரியங்களால் இந்திரியங்கள் செயல்பட்டு இந்த மூன்றும் என்ன செய்கிறதென்றால் அது இந்திரியங்களின் சார்பாக சித்ததிற்குப் பல விஷயங்களை அனுப்பி விட்டது.

முதலில் சித்தம் ஸ்படிகமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சித்தத்தில் பட்டு அது எதுவாக இருந்ததோ அதுவாக அந்த சித்தம் ஸ்படிகம் போல் மாறுகிறது. இப்போது நம்முடைய சித்தம் கெட்டிருக்கிறது. அதாவது ஸ்படிகம் போல் இல்லை. அது அசலாக இருக்க வேண்டுமானால் இதில் படிந்திருக்கிற விஷயங்களை அழித்துவிட்டால் ஸ்படிகம் ஸ்படிகமாக மாறுவதை போல் சித்தம் மாறிவிடும்.

சித்தம், ஆன்மாவிற்கு களங்கம் வருவதற்குக் காரணம் இந்திரியங்களால் தான் வருகிறது தவிர அதுவாக வருவதில்லை. அதிலிருந்து விஷயங்களை அகற்றி விட்டால் சுயம் என்ற சித்தம் சுத்தமாகிவிடும். ஆக சித்தம் சுத்தமாக தமோ, ரஜோ, குணத்தை அகற்ற வேண்டும். இவை ஒரு நாளில் முடியாது, இயற்கையாய் இருக்கக் கூடிய ஆன்மா, அதாவது சாட்சாத்காரம் (ஆன்மாவை), புருஷன் என்று சொன்னால் ஜீவர்களின் சித்தம்  கெட்டிருக்கிறது. நாம் அவற்றிலிருந்து விலக வேண்டும். இதை ஏன் சமாதி பாதத்தில் சொல்லியிருக்கிறார் என்றால் தப்பிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஏற்கனவே கிரகணங்கள் என்று நான் சொன்னேன். (மாணவர்களை பார்த்துச்சொல்கிறார்) கிரகணம் என்றால் ஒரு இடையூறு தான். இப்போது சூரியன், சந்திரன், பூமி இவற்றிற்கு இடையே இருந்து அதன் சுற்றியிருக்கின்ற சக்தியை கவர்ந்திருக்கிற நிலை தான் கிரகணம்.இங்கே என்ன கிரகணம் வந்தது. அதன்  உண்மைத்தன்மையினை மறைக்கிறது. ஆகவே

கர்மேந்திரியங்கள்  -5,

ஞானேந்திரியங்கள் -5,

மனம்;, புத்தி, அகங்காரம் -3,

ஆக இந்திரியங்கள் மொத்தம் சேர்த்தால் 13 ஆகும். இந்த 13-ன் உடைய மாறுபாடுகளால்தான் மனம் கெட்டுப் போகிறது. இப்படி பல பிறவிகளில் கெட்டிருப்பதால் ஆன்மா மீது இதனைப் பூசியிருக்கிறது. இதிலிருந்தும் விடுதலை கிடைப்பதற்குத்தான் தியானம் பழகுகிறோம்.

இவ்வாறாக ஒவ்வொரு நிலை வரும் போதும் எப்படிச் சரிசெய்வது என்றால் அதற்கு மெல்ல மெல்லப் பயிற்சியால் (யோக அப்பியாசத்தால்)தான் சரியாகும்.

பொறுமை முதலில் வரும், பின் ஞானம் வரும். எது நல்லது கெட்டது எனத் தெரியும்.தீயவை நம்மை விட்டு எது எவ்வளவு விலகியிருக்கிறது என்று தெரியும்.இன்னும் எவ்வளவு மீதம் இருக்கிறது என்றும் தெரியும். சித்தம் முழுவதும் சுத்தமாகிய பிறகு இறைவனைக் காண முடியும். இதற்குப் பயிற்சி தான் அடிப்படை. சித்தம் க்ரஹீத்ரு என்ற சமாதியாகும்.

சமாதி எத்தனை வகைப்படும் என்று பார்த்தால், கிரஹண, கிராஹீய, கிரஹீத்ரு என மூன்று வகைப்படும். ஒவ்வொரு சமாதியும், நிலைகள் மாறுபட்டு மாறுபட்டு வந்துக் கொண்டிருக்கும். சித்தம் சுத்தமாக இருப்பது என்றால் பயிற்சிக்கு ஏற்ப, அதன் சமாதி நிலைக்கு ஏற்ப, ஆன்ம ஒளி ஏற்பட்டு மனம். சித்தம், புத்தி, அங்காரம் சுத்தமாகி, கர்மேந்திரியங்கள், ஞானயேந்திரியங்கள் இவன் நம்முடைய பணிகளைக் கண்டித்து விட்டான் என்று அது ஒரு கட்டுகோப்புக்குள் வந்துவிடும். நீதான் நினைக்கிறாய், அது தவறு என்று நினைத்துவிட்டாய், உடனே அதிலிருந்து விலகி விடுவாய். எனவே சித்தத்தை சுத்தமாக வைப்பதற்கு இந்த சூத்திரத்தின் மூலம் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி நமக்குச் சொல்கிறார்.   

சாதனா பாதம்

சூத்திரம்: 1

தப: ஸ்வாத்யாய ஈஸ்வர
பிரணிதானானி க்ரியாயோக://

தப: என்றால் தமிழில் தவ, சமஸ்கிருதத்தில் தபஸ் என்றும் சொல்வர். அதாவது தவம் இயற்றுவது, அது ஒரு வினை.

ஸ்வாத்யா: என்றால் பிரணவம் முதலான, பிரணவம் மட்டும் சொல்லவில்லை, பிரணவ முதலான என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிரணவம் முதலான மந்திர ஜெபமும்.

ஈஸ்வரப்ரணிதானானி: பலனை எதிர்பாராமால் செய்யப்பட்ட கர்மங்களை பகவானுக்கு அர்பணம் செய்வது.

க்ரியாயோக: கர்மயோகமாகும்.

தப, பிரணவம், கிரியாயோகா, என மூன்றையும் சொல்கிறார். கிரியா யோகமென்றால் வேறொன்றை நினைக்க வேண்டாம். யோகம் என்றால் கிரியைதான். ஒரு பணி, ஒரு செயல் அவ்வளவுதான். இப்படிப்பட்ட யோகத்தில் என்னனென்ன அடங்கியுள்ளது என்பதை சாதனா பாதத்தில் சூத்திரம் - 1-ல் தப என்ற தவமும், ஸ்வாத்யா என்ற மந்திரமும், ஈஸ்வரப்ரணிதானானி இதனால் எதேனும் நன்மையோ, பலனோ கிடைக்குமானால், அனைத்தும் உன்னிடமே சமர்ப்பிக்கின்றேன் என்ற மனோதிடமும், பக்குவமும், அர்பணிக்கும் எண்ணமும், இருக்கின்ற போது அதுதான் கர்மயோகம்.

முதலில் தவத்தைப் பற்றி சொல்லும்போது தவம் என்றால் யோகம் பண்ணுவது மட்டுமல்ல, இவ்வாறும் இருக்கிறது சாப்பிடாமலிருந்தால் அது ஒரு தவம், காய்ச்சலாக இருந்தாலும்; அவன் தவமிருக்கின்றான் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இயற்கையாக காய்ச்சலாக இருக்கின்றவனுக்கு உண்மையில் அவனால் சாப்பிட முடியாது, சாப்பிடப் பிடிக்காது. ஆகவே அது ஒரு தவமாகக் கருதப்படும்.

தவம் என்றால் எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்பது, விலகியிருப்பது. எல்லாவற்றையும் வேண்டாதிருப்பது. அமைதியாக இருப்பது, அனுபவித்துக் கொண்டியிருப்பது, உன்னையே யார் என்று சிந்தித்திருப்பது. உனக்கு எது காரணம், நீ உருவாவதற்கு காரணம் எது என்பதை விட நீ யார்? உன்னுள் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்க்கெல்லாம் தவம் அவசியமாகிறது.

அந்தத் தவத்திலே எத்தனையோ வகைகள் பிராணாயாமத்தில்  எத்தனையோ வகைகள் இருக்கின்றன. ஆகவே சாதனை செய்ய வேண்டுமானால் தவம் செய்ய வேண்டும். அந்தத் தவம் செய்யும்போது வேறொன்று தேவைப்படுகின்றது அதுதான் ஓம் என்ற  மந்திரம்.

மந்திரங்கள் அவசியம் வேண்டுமா என்றால், பதஞ்சலி மஹரிஷி சொல்லிவிட்டார் ஆகையால் மந்திரம் வேண்டும். நினைவற்றிருக்கும் போது நான் எப்படி மந்திரத்தைச் சொல்ல முடியும் என்ற கேள்வியை கேட்பதாக வைத்துக் கொள்வோம். தவம் செய்து கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட உணர்வற்ற நிலைக்கு வந்துகொண்டிருப்போம். அப்போது மந்திரத்தை ஜெபிப்பது எங்கனம்? மந்திரமும் என்று சொல்வதை விட மனஸ், அதிலிதே மனம் பிளஸ் திறம் மந்திரம்.

மந்திரம் என்பது ஒரு அழகிய சொற்கள் என்பதை விட சக்தி மிகுந்த சொற்கள், சக்திமிகுந்த சொற்கள் என்று சொல்வதை விட ஒலிகளையுடைய எழுத்துக்களான, சொற்களான, வாக்கியங்களான, போன்ற பலவகை நிலைபாடுகள் உண்டு. எனவே மந்திரமும் அவசியமாகிறது.

தவமும், தவத்தில்; சொல்லக்கூடிய மந்திரமும், சேர்ந்து வரக்கூடிய பலன்கள் யாவும் தான் யோகம். அதாவது மந்திரம் என்றால் ஒலிகளால் ஆகக்கூடிய உபயோகம். ஓம் என்று சொல்லிவிட்டால் ஒலிதானே. ஒலியினால் என்ன சக்தி, ஒலிக்கும் நம்முடைய உடம்பிலே எங்கே ஒலித்துக் கொண்டியிருக்கிறது. ஆகவே இதுபோன்ற பல விஷயங்களை நமக்குச் சொல்லப்போகிறார்.

இந்த சூத்திரத்தில் தபஸ், மந்திரம், அதன் பலன்கள் மட்டும் சொல்லாமல், இந்திரிய நிக்ரஹம் என்ற பிரம்மச்சாரியமும் இருக்கிறது. இந்த சூத்திரத்தில் இந்திரியங்கள், பிரம்மச்சாரியம் வரவில்லை என்று கேட்பவருக்கு, நான் சொல்கிறேன் பட்டினி கிடக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். பட்டினி என்பது நோன்பு என்ற வரிசையில் அல்ல. இவருக்கு நோயிருக்கின்றது என்பதற்காக பட்டினி கிடக்கிறார். பட்டினி கிடப்பதென்றால் உண்ணாமலிருப்பது அவ்வளவுதான். உண்ணாமலிருப்பது என்று சொன்னால் உணவில்லை என்று பொருள். உணவைக் கொடுத்தாலும் உண்ணாமலிருப்பது என்று நினைத்தேன். ஆனால் உணவைக் கொடுத்ததினால் நான்  சாப்பிட்டேன் என்பார். அந்தளவு உணவு மேல் பற்று அதிகமாகயிருக்கிறது.

உதாரணத்திற்கு சாப்பாடு சாப்பிடக்கூடாதென்றால், பழம், ஐநிஸ், மற்ற அனைத்தும் சாப்பிடுவது. இதை ஏன் சொல்ல வருகிறோம் என்றால் இந்திரியங்கள், நிக்ரஹ என்ற ஒன்று மறைமுகமாகயிருக்கிறது.

இந்திரிய நிக்ரஹ என்பதில் இரண்டு பொருட்கள் இருக்கிறது. பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லக்கூடிய ஐந்து விதமான நம்முடைய இயல்புகள், பார்ப்பது, நுகர்வது, கேட்பது. பேசுவது, உணர்வது, என்று சொல்வார்கள். பொதுவாக இந்திரிய நிக்ஹரம் என்பது பிரம்மச்சாரியத்திற்கு அடிப்படையான ஒன்றாகும். இது யாருக்குப் பொருந்தும் என்று பார்த்தால், சாமியார்களுக்கா அல்லது நமக்கா என்றால் அது ஒரு தனிப்பாடமாகும். ஆகவே இதைப் பொதுவாக எடுத்துக் கொள்ளலாம்.

ஈஸ்வரப்ரணிதானானி என்றால் ஈஸ்வரன் என்பவர் யார்? நீ என்பது யார்? என்று பார்த்தால், உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம், நீ ஏன் யோகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பவர் ஒருவர் இருப்பார் அல்லவா? இப்போது பதஞ்சலி நமக்கு குரு. ஆகவே குரு சேவை என்கிறார். குரு சொன்னபடி கேட்க வேண்டுமல்லவா? ஈஸ்வரனை வணங்குகிறவன், தவம், மந்திரம் சொல்கின்றவன், அதன் பலன்களை இறைவனுக்கே சமர்ப்பிக்கிறவன் ,உண்மை பேசுவனாக மட்டுமே இருக்க முடியும். ஆக பிரம்மச்சாரியத்திற்கு அடுத்தபடியாக உண்மை பேசுவது, குரு சேவையிலிருப்பது, அடுத்து வாயினால் பேசாமலிருப்பது, வாயினால் தான் உண்மை, பொய் சொல்ல முடியும் என்று கேட்கலாம்? ஆகையால் தான் மௌனமாக இருக்கிறது கூட ஒரு நிக்ரஹம் தான்.

மௌனம் என்பது வாயினால் பேசாதிருப்பது மட்டுமல்ல எந்த அவயத்தினாலும், எந்த உணர்வினாலும், வெளிக் காட்டக் கூடாது. செய்கையினாலும், வேறுவிதமான அறிவித்தலாலும், உன்னுடைய மௌனம் கலைந்து விட்டது என்று பொருள். முழுக்க முழுக்க எந்தவித சிந்தனையாலும், அறிவித்தலும் இல்லாமலிருப்பது மௌனம்.
எனவே ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூறுகிற போது அடிப்படை விஷயம். மனு நீதிகள் போன்ற தர்மங்களை ஆராயாமல் ஒரு சூத்திரத்திற்கு நாம் பொருள் கூறிவிடமுடியாது. அவ்வளவு விஷயங்கள் அதில் பொதிந்திருக்கிறது.

சூத்திரம் 2

ஸமாதி  பாவனார்த்;த கிலேச தனூகரணார்த்த்ச //

முன்புள்ள சூத்திரத்தில் க்ரியா யோகம் என்று பார்த்திருக்கிறோம். இங்கே பொருள் கொள்ளக்கூடிய கர்ம யோகமானது, கர்மம் என்றால் வினைபடுவது தொழிற்படுவது என்று பொருளாகும்,

க்லேச - என்று சொன்னால் அவித்யை என்று பொருள். வித்யை - என்று சொன்னால் அறிவு, அவித்யை என்று சொன்னால் அறியாமை,

தனூகரண - என்றால் குறைத்தலை
அர்த்த - பிரயோஜனமாகக் கொண்டது

சமாதி பாவன - ஞானத்தினை உற்பத்தி செய்யும் நிலை என்று இங்கு பொருள்படுகின்றது.யோகத்தின் மூலம் க்லேசங்கள் என்று சொல்லக் கூடிய அறியாமைத்தன்மைகள் சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது, அப்போது சமாதி நிலையின் ப்ரவர்த்தி என்று சொல்லக்கூடிய சமாதி நிலையின் தொடர்பு ஏற்படுகின்றது.

சமாதி மார்க்கத்தில் ப்ரவர்த்தி ஏற்படுவதால் சமாதிக்குரிய சாதனங்களை நாம் அனுஷ்டிக்க வேண்டும். சாதனங்கள் என்றால் என்னென்ன தேவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். க்லேசம் என்பது வாசனை என்ற சொல்லால் விளக்கப்படுகின்றது, க்லேசம் நீங்கினால் தான் அவித்யை என்பது போய் வித்யை என்ற ஆன்ம அறிவு கிடைக்கிறது

சாதனா பாதம்: சூத்திரம்: 11

    த்யான ஹேயாஸ் தத்விருத்தய

கிலேசங்களைப் போக்குவதைக் குறிக்கிறது. எவ்வளவு இன்பம் வந்தாலும் சரி ,துன்பம் வந்தாலும் சரி கிலேசங்களைப் போக்குவதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும்.

தத்விருத்தய: கிரியா யோகத்தால் தேய்ந்து போகும்படி செய்யப்பட்ட ஸ்துடல விருத்திகள்.

த்யான ஹேயாஸ்: புருஷனுடைய தியானத்தினால் முற்றிலும் விலக்கத்தக்கவைகளாகச் செய்து விடுகிறது. தியானத்தினால் பல  விஷயங்களின் விருத்திகளை இல்லாமல் செய்து விடுகிறது அதுவும் பல வகை முயற்சிகளால் உதாரணத்திற்கு துணியில் அழுக்குப் பிடித்துள்ளது. அதைத் தண்ணீரில் கசக்கினால் ஒரளவு அழுக்கு போய்விடும். அதன் பின்னும் அந்தத் துணியில் உள்ள எண்ணைக்கறை, எண்ணைப் பிசுக்கு போக, டிடர்ஜெண்ட் சோப்புப் போட்டுக் கசக்கினால் அழுக்கு போய்விடும். அப்போதும்; துணியிலுள்ள கறை மட்டும் போகவில்லை. பல வழிகளில் முயன்றும் கறை போகவில்லை. இறுதியில் கறைபோகத் துணியையே எரித்துவிட்டால், கறை போய்விடும். மனதிலுள்ள கறைகளையெல்லாம் நாம் எளிதில் போக்க சில தத்துவங்கள் இதில் அடங்கியுள்ளது.

நினைவுகளை மாற்றிப் பார்க்க வேண்டும்.

சத்சங்க சகவாசங்களை மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஆன்மீகப் புத்தங்களைப் படிப்பது, நல்ல வார்த்தைகளைக் கேட்பது, நம் பணியில் கூட எது நல்லதோ அதைத் தேர்ந்தெடுத்துச் செய்வது.

எதைச் செய்தாலும் சரியாகச் செய்தால், அது சரியானதாக வரும். ஆனால் இதுபோன்ற செயல்களால், மனம் சுத்தமாகவில்லையென்றால் அப்போது  உன்னுடைய கர்மாக்கள் பலமாகவுள்ளது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். ஒரு உதாரணத்திற்குச் சொன்னால், உட்கார வேண்டியுள்ளது என்றால் கூட எந்த மரத்தின் கீழ் இருந்தால் ஆக்ஸிஜன் கிடைக்கிறது, எந்த மரத்தில் கார்பன் டை ஆக்ஸைடு கிடைக்கிறது என்று தேர்ந்தெடுத்து உட்காரவேண்டும். அப்போதுதான் மேலே சொன்ன எதைச் செய்தாலும் சரியாகச் செய்தல் கவனித்துச் செய்தல் ஆகும்.

எந்தநிலையிலும் சரியாகவில்லையென்றால் மனத்தையே எரித்து விடுவதுதான் வழி. எப்படித் துணியை எரித்து விடுகிறோமோ அதுபோல, மனமே இல்லாமல் செய்து விடுவது. மனத்தில் விருத்தியில்லாமல் உண்டாகமால் இருக்கச் செய்வது. சித்த விருத்தி நிரோதஹா ஆகும். அதாவது, மனதில் எழும் விருத்திகளை, மனதில் ஒன்றன்பின் ஒன்றாக வரும் விருத்திகளை எங்கு தோன்று கிறதோ, அங்கேயே அதை அழித்து விடுவது. எதைப் பார்த்தால், கெட்ட எண்ணங்கள் பற்றிக் கொள்ளுமோ, அந்தயிடத்தில் அது எவ்வாறு நம்முள் நுழைகிறது, எவ்வாறு எண்ணத்தை மாற்றுகிறது என்பதை, அது நம்மைத் தாக்கிய பிறகு யோசிக்காமல், தாக்குவதற்கு முன்னாலேயே அதை அழித்து விடுவது ஒரு சிறந்த வழி. ஆகவே சித்தத்தின் விருத்திகளை அழித்துவிட்டால், சித்தம் துடய்மை பெற்றுவிட்டால், நம்முடைய துன்பங்கள் தீர்ந்துவிடும். ஞான வறுமைகள் தீர்ந்துவிடும், பாவங்கள் போய்விடும்.

பாத்திரத்தில் உள்ள வாசனை!

எதைப் பாத்திரத்தில் வைக்கிறோமோ, அதன் வாசனையை அப்பாத்திரம் பெற்றுவிடும். உதாரணத்திற்கு (புதினா, பருப்புசாதம், சட்னி, புளியோதரை சாதம், லெமன், பெருங்காயம்). மனிதனி;ன் மனமும் ஒரு பாத்திரம் தான். மனிதனுடைய செயல்பாடுகளுக்குகேற்ப அவனுடைய எண்ணங்களுக்கேற்ப ஒருவனுக்கு குணம் அமைகிறது. மனிதனின் இயல்பான குணம் நல்லவைதான். கர்மா, ஊழ்வினை தான் குணம். பாத்திரத்திலுள்ள வாசனையைப் போக்க தண்ணீரை ஊற்றிக் கழுவி, பாத்திரத்தை கவிழ்த்து வைப்பது, பின்னர் வாசனை போகவில்லையென்றால் மண், களிமண்ணைப் போட்டு வைப்பது, அதன் பின்பு வாசனை போகவில்லையென்றால், பாத்திரத்தையே உடைத்துவிடுவதே வழி!.அது போல வாசனையைப் போக்க முழுமையாக அழித்துவிடுவதுதான் வழி! மனம் என்ற ஒன்று சித்தத்தை ஒரு பாத்திரமாக எடுத்துக் கொள்வது இங்கு உதாரணத்திற்காகத்தான்.

சித்தத்தை சுத்தம் செய்ய:

புலன்களை அடக்கியாள்வதன் மூலம் சித்தத்தில் விருத்திகள் எழப்பெறாது செய்வதால் மனம் சுத்தமாகும்;. அதன்பின் மிஞ்சும் விருத்திகளை ஸ்தூல விருத்திகளை கிரியா யோகத்தினால் விலக்கப் பார்ப்பது, அதாவது தொடர்ந்து பணி செய்வதன் மூலம் சுத்தம் செய்வது. பணி என்றால் குருநாதர் கூறியுள்ள வழிகளையெல்லாம் பின்பற்றினால் மனம் சுத்தமாகும். அதன் பின்னும் மிஞ்சினால், துணியை எரிப்பது போன்று, பாத்திரத்தை உடைப்பது போன்று சித்தத்தை சுத்தம் செய்வது எப்படி செய்வயென்றால், ஒன்றைப் பார்க்கும்போது அதன் எண்ணங்கள், நினைவுகள், பதியாமல், இருக்க மற்றும் வராமல் இருக்க பயிற்சிகளைக் கொடுத்து, தியானப் பயிற்சிகளை செய்வதன் மூலம் மனதினை சித்தத்தினைச் சுத்தம் செய்ய வேண்டும். அதுவும் மனத்தின் மூலமே செய்ய வேண்டியிருக்கிறது.  

சூத்திரம்: 26

விவேகக்யாதி: அவிப்லவா ஹானோபாய://

விவேகக்யாதி என்றால் கீர்த்தி என்று பொருள். விவேகத்தின் பெருமை என்னவென்று கேட்டால் விவேகத்தை இடைவிடாது கடைபிடித்தால், அறியாமையைப் போக்க வழி. விவேகம் என்று சொன்னால், அனுபவத்தினால் வருவதுதான் விவேகம். வெறும் புத்தகத்தினால் வருவது விவேகமல்ல. ஆக விவேகம் என்பதே வேறு.

அனுபவத்தினால் வரக்கூடிய நல்லது, கெட்டதுதான் விவேகம். விவேகம் எப்படி வந்தது, விவேகம் இன்னும் எப்படி வரவேண்டும் என்றெல்லாம் இடைவிடாது அறிந்து தொடர்ந்து பயில்வது அதுதான் அறியாமையைப் போக்கும்.

எது உண்மைப்பொருள், உண்மைப்பொருள் இல்லாதது எது? என்பதே பயிற்சியின் நோக்கம். புருஷன் என்பவர் யார்? எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்ற சமஸ்காரங்கள் மூலமாகவும், அனுபவங்கள் மூலமாகவும், புலன்கள் மூலமாகவும், இந்த பிரக்ஞையிலிருந்து வேறுபட்டிருப்பவன்தான்  புருஷன். அவனே எல்லாவற்றையும் அறிபவன், ஆனால் பலன் என்று வருகிறபோது நான் அறிந்தேன், நான் பெற்றேன் என்ற நான் ஒன்று இருக்கிறதே அது தான் உண்மையான புருஷன்.

புருஷன் என்பது இந்தப் பிரபஞ்சம் அல்ல. ஆனால் எல்லாம் அங்கிருந்து வந்திருக்கிறது என்று சொன்னார்கள். ஆம் அந்த அணுக்களில் ஒரு அணுவாக இருக்கிறோம். அப்படியானால் இந்தப் பிரபஞ்சம் நானில்லை என்று சொன்னால் எப்படி? அது ஒரு தத்துவம். ஆனால் நீ பிரஞ்சத்திலிருந்து வேறுபட்டிருக்கிறாய்? அது எப்படி என்றால் போகப் போக உங்களுக்கே தெரியும். நீ ஒரு ஜடமா? என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

அடுத்ததாக உள்ளே போகப் போக நீ தான் மனமா? நான் மனமல்ல. புருஷன் என்பவன் வேறு. மனம் என்பது வேறு. புருஷன் என்பவன் எல்லாவற்றிலும் தள்ளி நின்று செயலாற்றுகின்றவன்.ஆகவே அது இயற்கை.

மனமுமில்லை, இயற்கையுமில்லை, இது இயற்கையா? அதன் இயல்புக்கு நீ மாறியிருக்கிறாய். அவ்வளவுதான்
உன்னுடைய இயல்பிலே நீ இல்லை. இயல்புகளைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். எனவே புருஷனுடன் மாற்றங்கள் எப்படி நிகழ முடியும். நீ புருஷனாயிருந்தால், உன்னிடம் மாற்றங்கள் ஏன் வந்துக் கொண்டியிருக்கிறது. நீ ஜடமாகவிருக்கிறாய், பிரபஞ்சமாகவிருக்கிறாய், மனமாக விருக்கிறாய், இதுவெல்லாம் இருக்கின்றதால் தான் நீ உண்மையை அறியாதவனாகயிருக்கிறாய். ஆகையால் நீ புருஷனில்லை. புருஷனாகயிருந்தால் இதுவெல்லாம் இருக்கக் கூடாது. ஆனால் புருஷனிடம் மாற்றங்கள் எப்படி வந்தன என்றால் சேர்வதும், பிரிவதும், மீண்டும் சேர்வதும், சேர்வது ஒன்றோடு ஒன்று சேர்வது. விஷயங்களோடு விஷயங்களைச் சேர்த்துக் கொள்வது. ஏற்கனவே இருந்தவற்றில் புது விஷயங்களைச் சேர்த்துக் கொள்வது, பிறகு இதிலிருந்து துடக்கி ஏறிவது, சிறிது காலம் கழித்துச் சேர்வது. இது போன்ற தத்துவ நிலைக்காகச் சொல்வது. இப்படி மாறிக்கொண்டேயிருப்பது எது குணங்களா?, இயல்புகளா? என்பதைத் தொடர்ந்து பயிற்சியின் மூலம் விவேகத்துடன் நீ அதை பிரித்தறியத் தொடங்கும் போது நான் நானாகவிருக்கிறேன்.

இவைகளெல்லாம் என்னுடையது அல்ல, என்னை வந்து சார்ந்தவை, அதை நான் ஒதுக்கினேன். நான் அதுவல்ல. நான் அவனில்லை. நான் புருஷன், நான் ஒரு கருவி, நான் ஒரு சட்டியை வீழ்த்தி பொம்மையாக செய்தேன். சட்டியை மீட்டிப் பானையாக்கினேன். சட்டியை நீட்டி கருவியாக்கினேன். ஆனால் பானையாகவிருக்கும் போதும் சரி, கருவியாகவிருக்கும் போதும் சரி, அது நானில்லை. என்னவென்று சொன்னால் என்னை சார்ந்தது அல்ல.

ஒரு படைவீரனின்; வெற்றி, தோல்வி என்பது தனிப்பட்ட முறையில் அவனுக்குச் சேர்வதில்லை. அவனுடைய அரசனுக்குத்தான் அந்தப் புகழ் என்பது போல. இந்த மாற்றங்கள் படைவீரனை போன்று புருஷனுக்குச் சாராது. எதுவும் நம்மைப் பற்றாது என்று புரிந்து கொண்டால், நமக்கு விவேகக்யாதி ஏற்படும்.

 புருஷன் என்பவன் தன்னுடைய உண்மையியல்பில் சுயத்தில், கலப்பற்ற நிலையைப் பெற்றுவிட்டால், நமக்குத் துன்பமில்லை. எங்கும் நிறைந்த சக்தியும் பெற்று எல்லாம் அறிந்தபடி அவன் ஒளிர ஆரம்பிப்பான். அது இப்போதைக்கு நடக்கின்ற விஷயமா? இந்த வேளைவரை நீ துன்பப் படுகிறாயோ? அதை ஒதுங்;கி நின்று வேடிக்கை பார், அந்த துன்பம் உன்னை பாதிக்காது. அந்த துன்பத்தை உன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறாய்? அது தீருகிறவரை உன் மனம் உன்னை விட்டுப் போவதில்லை. விடாப்பிடியாக இருக்கிறாய்? யாருக்கோ செய்கிறாய், எதற்காகச் செய்கிறாய், ஏற்கனவே அவர்களோடு எதோ செய்திருக் கிறாய்? உனக்கென கடவுள் ஏன் செய்யவில்லை.ஆக இப்போது வந்ததை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இதிலிருந்து தொடராமல், வாழ்க்கையின் பயணத்தை எண்ணாமல், விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சூத்திரம்: 47

ப்ரயத்ன சைதில்யானந்த ஸமாபத்திப்யாம்//

இதன் பொருள் ஆதிசேஷன் இறைவனுக்கு ஆசனமாக இருக்கிறார். ஆதிசேஷன்; மீது இறைவன் அமர்ந்திருக்கிறார். ஆகவே அவரை நினைத்துக் கொண்டால் ஆசன ஜெயம் கிடைக்கும். அதாவது ஆதிசேஷன் யார் என்றால் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி. ஆகையால் ஆதிசேஷனை நினைத்தால் போதும். அனந்த என்றால் பாம்பு,  இவர் இறைவனைத் தாங்கிக்கொண்டிருக்கிறார். இறைவனை தாங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் உலகத்தையே, பிரபஞ்சத்தையே தாங்கியிருக்கிறார். அப்போது சரியாக உட்கார்ந்துக் கொண்டிருந்தால் தானே தாங்க முடியும்.

சூத்திரம்: 50

பாஹ்யாப்யந்தர ஸ்தம்ப விருத்தி://
தேச,கால, ஸங்க்யாபி
பாணீத்ருஷ்டோ தீர்க்க சூக்ஷ்ஷ்ம

சாதனா பாதத்தில் சூத்திரம்50 ல் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அவர்கள் எதைச் சொல்ல வருகிறார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு முன்னால், சூத்திரத்தில் உள்ள ஒவ்வாரு சொற்களுக்கும் பொருளைப்; பார்போம்.

பாஹ்ய - என்று சொல்லப்படுவது பிராணாயாமத்தைப் பற்றிய விஷயம்
பாஹ்ய விருத்தி - உடம்புக்கு வெளியே விருத்தியை உண்டாக்குவது

ஆப்யந்தர விருத்தி - உடலுக்கு உள்ளே விருத்தியை உண்டாக்குவது.
 
ஸ்தம்ப விருத்தி - வெளியே அனுப்புதல், உள்ளே இழுத்தல் அல்லது உள்ளும், வெளியும் நி;ன்ற நிலை அந்த விருத்தியை அடக்குவது.  

தேசம் - பகுதி, பிராந்தியம், வளாகம், களம்,  அளவு, மூச்சுக்காற்று பரவுகின்ற துடரம். அதாவது நிற்கும் இடம், பகுதி அளவு, சுவாசம் பயணம் செய்யும் நீளத்தின் அளவு எவ்வளவு என ஒரு பஞ்சை மூக்கின் கீழ் வைத்து அதன் அசைவால் மூச்சின் துடரத்தை (னுளைவயணஉந). அங்குலம், அங்குலமாக அளக்கலாம். இது அந்தக்  காலத்தில் செய்த  சோதனையின்; படி குறைந்தபட்சம் 6 அங்குலம், 8 அங்குலம்,10 அங்குலம்,  அதிகபட்சம் 12 அங்குலம் செல்கிறதா? என்று சோதித்து  அளந்துப் பார்த்த  முறை

காலம் - நேரத்தை குறிக்கும். எத்தனை மாத்திரை கால அளவில் அந்த நீளத்தின்  அளவைச் சென்று அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்.(மாத்திரை)யில்.

ஷங்கிய- கணக்கு

மாத்திரை - மூச்சை உள்ளேயிழுத்து, உள்ளே நிறுத்துதல், வெளியே விடுதல் ஆகியவற்றின் கால அளவை எண்ணிக்கையை மாத்திரையில் கணக்கிடுகிறோம்.

ஸ்தம்பனம் - காற்றை வெளியே விட்டபின் மீண்டும் உள்ளேயெடுக்கவில்லை. உள்ளே காற்றில்லை. வெளியேயிருந்து காற்றையெடுக்கவுமில்லை, இந்த நிலையே ஸ்தம்பனம்.

ஸங்க்யாபி- மாத்திரையின் எண், மூச்சின் எண்ணிக்கையின் அளவு.

பரித்ருஷ்டோ- பார்க்கப்பட்டதாகக் கொண்டு
தீர்க்க- நீளமானதாகவும்
பவதி- ஆகிறது.
பரப்பளவு- காற்றின் நீளம், பரவும் அளவு.

பாஹ்ய என்று சொல்லும் பிராணாயாமம் பற்றிச் சொல்கின்ற போது நச்சுக் காற்றினுள் கெடுதல் விளைவிக்கூடிய இடங்களில் இல்லாமல், உங்கள் வீட்டிலிலுள்ள சுத்தமான இடத்தில், அதிகாலை நேரம் அதிகம்  கலப்பில்லாத ஆக்ஸிஜன் இருக்கிறது. ஓசோனும் அதிகமாகக் கிடைப்பது மட்டுமல்லாமல், உணர்வலைகள் வெகுவாக அடங்கிய நேரமாக இருப்பதாலும் அல்லது மாலை நேரத்திலும் இதை மேற்கொள்ளலாம். சுவாசம் ஒரே மாதிரிஅளவுடன் சீராக உள்ளிழுத்தல், வெளிவிடுதல் என இருக்க வேண்டும்.

பிராணாயாமம் நான்கு நிலையில் சொல்லப்படுகிறது. பூரகம் - சுவாசத்தை உள்ளேயிழுப்பது. ரேசகம் -. சுவாசத்தை வெளியே விடுவது. கும்பகம் - சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைத்தல். சுவாசத்தை வெளியேற்றிய பின் உள்ளிழுக்கும் காலத்தைக் கூட்டுவது, ஸ்தம்பனம்.   

உடம்புக்கு உள்ளே, உடம்புக்கு வெளியே, இரண்டுமற்றதான நிலை.

சுவாசத்தை உள்ளே இழுக்கும் போது எவ்வளவு அதிகமான சுவாசம் உள்ளேயிழுக்க முடியுமோ, அந்த அளவுக்கு எடுத்துக் கொண்டு, வெளியே விடும் போது ஒரே சீராக வெளிவிட வேண்டும். இதில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் சுவாசத்தின் எண்ணிக்கையின் அளவு குறைகிறது. காலத்தின் அளவு கூடுகிறது. கால அளவைச் சொல்லும் போது உள்ளிழுத்தல் என்பது ஒரு காலம், மற்றும் உள் நிறுத்தல் ஒரு காலம், வெளியிட்டு மீண்டும் உள்ளே எடுக்கும் அவகாசம் என்பது ஒரு காலம்.   இதன் இடைப்பட்ட  இந்த மூன்று கால அளவே மாத்திரை(நொடி) என்று குறிப்பிடப்படுகிறது.

உள்ளேயிழுப்பதை பூரகம் என்பர். அடுத்தபடியாக அதிகப்படியான காற்றை நுரையீரலுக்குக் கொடுக்க வேண்டும். எவ்வளவு அதிகப் படியாக நுரையீரல் முழுக்கொள்ளவுக்கு சுவாசத்தை எடுத்துக் கொள்வது. விருத்தியை உள்ளே நிறுத்தல் அல்லது வெளியே நிறுத்தல் என கூறப்பட்டாலும்;, இதை வெளியே எடுத்துக் கொள்வதே சிறப்பு.

ஏனென்றால் நமக்கு தேவை எங்கே உள்ளது? வெளியே இருப்பது தான் உள்ளே வரவேண்டும். இதன் பின் பூரகம், ரேசகம், ஆக மூன்றிற்குப் பின் அதிகப்படுத்தும் மாத்திரையின் அளவு என்பது மனதின் யூகத்தால்  செய்யப்படுகிறது. உள்ளே நிறுத்தல் என்பதும் மனயூகத்தின் பழக்கமே.

6 ஆதாரங்களிலும் பிராண வாயுவை அந்தந்த, ஆதார இடத்திற்குக் கொண்டு வந்து உணர்வினால் செய்யலாம். பிறகு ஒவ்வொரு ஆதார மையத்திற்கும் ஒரு மந்திர ஒலியூட்டல் சிறப்பைத் தரும். அப்போது சக்தி அதிகமாகிறது, இப்படி மூன்று நிலைகளை மட்டும் சொல்லாமல், பல வழிகளில் நமக்கு பிராணாயாமத்தின் நுணுக்கங்களைச் சொல்லித் தருகிறார்.

சூத்திரம் 53

தாரணாஸூச யோக்யதா மனஸ:

சித்தத்தில் ஏற்படுகின்ற தோஷங்கள் பிராணாயமத் தினால் விலகும், காரியமான பாவங்களும் தேய்ந்துவிடும.;, காரியமான பாவங்கள் என்றால் கர்மாக்கள். சித்தத்தின் துடண்டலினால் நிகழப்பெற்ற பாவங்;கள. ஏனென்றால் விதி என்பது சித்தத்தை தழுவியே இருக்கிறது. விதியானது சித்தத்தின் மூலம்தான் செயல்படுத்தப்படுகின்றது.

சித்தத்தின் மூலமாகச் செய்த காரியமான பாவங்;கள் எல்லாம் பிராணாயாமத்தின் மூலமாக சிறிது சிறிதாகத் தேய்ந்து விடும் அல்லது காணாமல் போய் விடும் என்று சொல்கிறார் சற்குரு. தொடர்ந்த பயிற்சிகளில் ஈடுபட வேண்டும், பயிற்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற செயல்கள் எது நிகழ்ந்தாலும் நம்முடைய பயிற்சியினை குறைத்துவிடக் கூடாது, பிராணாயாமம் செய்தால் சித்த தோஷம் விலகும். ஆன்ம தரிசனத்தை அடைந்து விடலாம்.

பிராணாயாமத்தினாலே சாதகனுக்கு சமாதி சித்தி கிடைக்கிறது. சமாதி உனக்கு நிறைவேற வேண்டுமானால் சாதகன் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்கிறார் பதஞ்ஜலி மஹரிஷி.

மனஸ - என்று சொன்னால் மனதிற்கு.

தாரண ஸுச - என்றால் சூக்ஷ்ம லட்சிய தாரணைகளில், தாரணை என்று சொன்னால் ஒழுங்;கு படுத்துதல், கவனப்படுத்துதல். நிலைப்படுத்துதல்,

சூக்ஷ்ம  - என்றால் மிகவும் நுணுக்கமான விஷயம்.

பெரும்பாலான சாதகர்கள் ஏதாவது ஒன்றைக் கருப்பொருளாக வைத்துக்கொள்வார்கள், கருப்பொருளை எந்த வடிவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பம். உதாரணமாக பேரமைதி என்ற விஷயத்தை நாம் தாரணைப் பொருளாக வைத்துக்கொள்ளலாம். உடனே ஒரு கேள்வி உங்கள் மனதில் வரும் தாரணைப்பொருளாக ஏதேனும் ஒரு பொருளை மனது பற்றியிருக்க வேண்டும். நீங்;கள் இவ்வாறு சொல்கிறீர்களே என்று.

ஆனால் அது ஆரம்ப சாதகர்களுக்கு, இங்கே சொல்வது தொடர்ந்த பயிற்சியில் நிலைபெற்ற சாதகர்களுக்கு, முதலில் அடிப்படை விஷயங்களை எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். அவ்வாறு ஒவ்வொன்றாகத் தியானம் என்றாலே உணர்வற்ற நிலை. மனமற்ற நிலைதானே. அந்த நிலைக்கு வருகின்ற போது பேரமைதி கிடைக்கும், அந்த பேரமைதி என்ற பண்புதான் சூட்சம தாரணை.

ஒவ்வொருவருடைய உடல். மனப்பாங்குக்கு ஏற்றவாறு சூட்சமங்கள் மாறும், அதற்கு தக்கவாறு கிடைக்கும் பலன்களும் மாறும். தியானப்பொருளாக எதை நீங்கள் அதிகமாக விரும்பினீர்களோ இறுதியில் அது உங்கள் முன்னேத் தோன்றி உங்களுடைய ஆவலைத் தீர்த்து விடும். மற்றும் சிலருக்கு ஆதாரங்களில் இருந்து ஆதார சக்திகள் மேல் எழும்புகின்ற தோற்றங்கள் கிடைக்கும்.

இந்த ஆதாரச் சக்தியானது ஒலி வடிவாக, ஒளி வடிவாக அல்லது உரு வடிவாக எவ்வாறு வேண்டுமானாலும் கிடைக்கும். அப்படிக் கிடைக்கின்ற போது அதோடு நின்று விடத்தேவையில்லை, அதையும் கண்டபின் மேலும் நீங்கள்  ஆராய்ந்து செல்ல வேண்டும். நல்ல பலன்களை எல்லாம் சித்தத்திற்குள்ளே புகுத்துங்கள், இவை எல்லாம் சித்தத்தில் நுழையும்போது அங்கே ஏற்கனவே தேவையில்லாமல் இருக்கின்ற விஷயங்கள் நமக்கு அங்கு வேலையில்லை என்று தாமாகவே வெளியேறிவிடும்.

சித்திகளில் சாதகன் நின்று விடக்கூடாது, அந்த ஆரம்ப மகிழ்ச்சிகளையும் கடந்து செல்ல வேண்டும. ஆகவே மனதிற்கு அந்த சூட்சமமான லட்சிய தாரணை என்பதை நான் அடைந்தே தீருவேன் என்ற நிலை ஏற்பட்டால் அது கிடைத்து விட்டால் யோக்யதாஸ - அதை அடைவதற்கான தகுதி உனக்கு உண்டு அது கிடைத்து விடும். மனதிற்கு சூட்சமமான தாரணை கிடைத்துவிட்டால் சமாதி அடைவதற்கான தகுதி வந்து விடுகிறது.

சூத்திரம் 54

 ஸ்வவிஷயாஸம்ப்ரயோகே சித்தஸ்வரூபானுகார
 இவேந்த்ரியாணாம் ப்ரத்யாஹார்;//

இவேந்த்ரியாணாம ஸ்ரீ இந்திரியங்களுக்கு ஸ்வஸ்வ விஷயா ஸ்ரீ அதற்குடைய விஷயங்களுக்கு தத்தமது விஷயங்களான சப்தம் முதலியவற்றுடன் உள்ள சம்பந்தம் அது எப்போது விலகுகிறதோ,
சித்தஸ்வரூபானுகார ஸ்ரீ அப்போது உள்ள சித்தத்தின் உண்மையான சொரூபத்தை அனுசரிப்பது தான் பிரத்யாஹாரம்; ஆகும்

அதாவது இந்திரியங்களுக்கு தத்தமது விஷயங்களான சப்தம் முதலியவற்றுடன் உள்ள சம்பந்தம் அது எப்போது விலகுகிறதோ அப்போது உள்ள சித்தத்தின் உண்மையான சொரூபத்தை அனுசாணீப்பது தான் பிரத்யாஹாரம்; ஆகும்

இங்கே என்ன சொல்ல வருகின்றார் என்றால் சப்தம் முதலான விஷயங்கள் மோகம், ராகம் முதலியவற்றை உண்டுபண்ணக் கூடியவை. இவற்றில் இந்திரியங்கள் இவற்றைக் கவனிக்கும்போது யோகத்திற்கு அவை இடையூறாக அமைகிறது.

இயம, நியம, ஆசன,ப்ராணாயாம. பிரத்யாஹாரத்தை முறையே அனுஷ்டிப்பவர்களுக்கு தனது சுத்த சத்வமயமான சொருபத்தை அந்த சாதகனுடைய சித்தமானது பெற்றுவிடும். இந்த யோகத்தை  முறையாக வரிசைப்படி சரியாகச் செய்பவர்களுக்கு படிப்படியாக இந்திரியங்களை கவனத்தைத் திசை திருப்பக்கூடியவை விலகி, சுத்த சொரூபம் உண்டாகும்.

சித்தத்தைத் தனியாக பார்க்கிற வாய்ப்பு பிரத்யாஹாரத்தில் தொடங்கி தாரணையில் இருக்கின்ற போது நமக்குக் கிடைக்கும், மோசமான விஷயங்கள் சித்தத்திலிருந்து அகன்றவுடன் சித்தத்தின் சுயரூபம் நமக்குத் தெரியவரும், உண்மையான ரூபம் தெரியத் தெரிய உனக்கு ஈடுபாடு அதிகமாகும். அதிகமான ஈடுபாடு  வரவர உனக்குச் சமாதி சித்தி கிடைத்துவிடும்.

சித்தத்தினுடைய விகாரங்களைப் பார்த்துக் கொண்டே, அனுபவித்துக் கொண்டே இருப்பதால் தியானம் செய்ய முடியுமா? எப்போது நீங்கள் சூட்சமமான அந்தத் தாரணையினைப் பழகத் தொடங்கி விட்டீர்களோ மற்ற விஷயங்கள் எல்லாம் உங்களுடய பேருணர்விலே வருபவை. அது உங்களுக்கு இருப்பதை மட்டுமே உணர்த்திக்கொண்டே இருக்கும்.

சூத்திரம்55

தத்பரமா வஸ்யதேந்த்ரியாணாம்
தத = முற்கூறிய பிரத்யாஹாரத்தில் இருந்து இந்திரியாணாம் - புலன்களுக்கு
பரமா - மேலான

வச்ய = வசப்பட்டிருக்கும் தன்மையானது, பிரத்யாஹாரத்தை நீ சரியாகச் செய்து கொண்டிருந்தால் உனக்கு சித்தம் வசியமாகி நீ மேம்படுவாய், சித்தம் வசியமாக வேண்டும் என்பதே இதில் முக்கியம்.

உதாரணமாக, ராவணண் சீதையினை வசப்படுத்திக் கொள்ள முயன்று தோற்றான். இதில் அதீதமான முயற்சி ராவணணுடையது. தன் பராக்கிரமங்களை எல்லாம் வெளிப்படுத்தினான், எவ்வளவோ முயற்சி செய்தும் தோற்றான். ஏனென்றால் சீதை ராமனை விட்டு அணுவளவும் விலகாத மனம் பெற்றிருந்தாள். அவளுடைய மனம் முழுவதும் அவனே கணவன், அவனே தெய்வம் என்ற நிலைப்பாடு சீதையினுடையது,

இங்கே விஷயங்கள் என்பது ராவணணைப் போன்றது. பலமான முயற்சி எடுத்து சாதகனை திசை திருப்பவே அவை இருக்கும், இந்திரியங்கள் சீதா தேவியினைப் போன்றது. அங்கே சீதாதேவியின் இந்திரியங்கள்; அவளுடைய கட்டுப்பாட்டில் இருந்தது, பிரத்யாஹாரத்தில் நீ கட்டுப்பாட்டில் இருந்தால் விஷயங்கள் உன்னிடம் தோற்று நீ யோக வெற்றியினை நோக்கிச் செல்வாய்.

இந்திரியங்கள் விஷயங்களுக்கு அடிமையாகாமல் இருந்தால் அந்த நிலை பிரத்யாஹார நிலை ஆகும், பிரத்யாஹாரம் என்பது சாதகன் புலன்களை வென்ற நிலை. அவற்றில் இருந்து விலகி நிற்கும் நிலை. அதுவே சாதகனுடைய ஆசாபாசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை.

விபூதி பாதம்

சூத்திரம் 39

பந்தகாரண சைதில்யாத் ப்ரசாரஸம் வேதனாச்ச சித்தஸ்யபரசரீராவேச :
உதான வாயுவினை ஜெயிப்பது எப்படி?

விபூதி பாதம் சூத்திரம் 39 ன் அடிப்படையாக அமைவது,

அதற்கு முன்பாக இந்திரியங்களைப் பற்றி விரிவாகப் பேசுவோம். இந்திரியங்கள் என்பது என்ன? பஞ்சேந்திரியங்கள்  என்பது என்ன?  என்று உங்களுக்குத் தெரியும். உடம்பு மற்றும் உடம்புக்குள்ளே உணர்வுகளைத் தரக்கூடியது. வெளிப்புலன்களை உள்ளே செலுத்துவது இவையெல்லாம் இந்திரியங்கள். ஆக இந்திரியங்களுடைய விருத்தி என்ன என்பதை பார்ப்போம்,

ஒரு சப்தம் கேட்டவுடன் அது என்ன, மற்றும் எதனால் ஏற்பட்டது. அது எங்கேயிருந்து வந்தது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம், கேட்பது என்ற அடிப்படையில் உள்ள இந்திரியமானது ஒரு ஒலியினைக் கேட்டவுடன் இத்தனை வேலையினையும் செய்கிறது.

ஆகவே எல்லா இந்திரியங்களையும் விருத்திகள் என்று சொல்வது, கேட்பது மட்டுமா. பார்ப்பது. நுகர்வது என்ற மாதிரி செயல்பாடுகளின் அடிப்படையில் இந்திரியங்கள் பல வகைப்படுகிறது.

இங்கே இந்திரிய விருத்திகளை இரண்டாகப் பிரித்து விடுகிறார்கள்,

பாஹ்ய  விருத்தி
ஆப்யந்தர விருத்தி

பாஹ்ய விருத்தி என்பது நான் முன்னே சொன்னது தான். உருவம் மற்றும் சப்தம் ஆகியவை பற்றிய அறிவினைத் தருவது,

பொதுவாக பார்ப்பது, கேட்பது என்ற செயல் பாடுகளை நிறுத்தி விட்டாலே யோகத்தில் நமக்கு வெற்றி
கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

எதைப் பார்க்க வேண்டும். எதைப் பார்க்கக்கூடாது என்ற பாகுபாடு உள்ளது, எந்த அளவு அவற்றைப் பார்க்க வேண்டும் என்பது தான் விருத்திகளுடைய சாராம்சம்,

ஆப்யந்தர விருத்தி என்பது, சரீரத்தில் இருக்கக்கூடிய பஞ்ச வாயுக்கள் என்ற வாயுக்களின் விருத்தி. இவை உள்ளபோது ஏனைய விருத்திகளும் இருக்கும், ஆக இந்த ஆப்யந்தர விருத்தி இருக்கும்போது பாஹ்ய விருத்தியும் இருக்கும், சுருங்கச் சொன்னால் வாயுக்களின் விருத்தி இருக்கின்ற போது சப்தம். உருவம் போன்ற விருத்திகளும் இருக்கும். எனவே இவை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆப்யந்திர விருத்தி என்ற விருத்திகள் இல்லாத போது பாஹ்ய விருத்தி இருக்காது.

உதாரணமாக - இராமு என்ற ஒருவர் இருக்கிறார், அவர் சீருடை அணிந்து பணிக்குச் செல்கிறார், இதில் இந்தச் சீருடை என்பது பாஹ்ய விருத்தி. இராமு என்பவர் ஆப்யந்தர விருத்தி. எவ்வாறு இராமு என்பவர் இல்லை என்றால் அவர் சீருடை என்பதற்கும் பொருளில்லை என்பது போல ஆப்யந்திர விருத்தி என்ற விருத்திகள் இல்லாத போது பாஹ்ய விருத்தி இருக்காது என்பது உண்மையாகும்.

வாயுக்களின் விருத்தி என்பது இல்லாத போது ஏனைய விருத்திகள் இல்லை.அவற்றில் என்ன நடக்கிறது ,எங்கெங்கு நடக்கிறது, எப்போது நடக்கிறது என்பதைப் பார்ப்போம். பிராணனின் விருத்தி என்பது மூக்கின் நுனி முதல் இதயம் வரை உள்ள பகுதியினை அடைந்து நிலவி நிற்கிறது பிராணன். மேலிருந்து கீழாக, இங்கே இதயத்தி லிருந்து மூக்கின் நுனி வரை என்றும் இவ்வாறும் எடுத்துக்கொள்ளலாம்.

சமான விருத்தி - உட்கொண்ட ஆகாரத்தை இரத்தமாக மாற்றுவதற்குரிய செயல்களைச் செய்யும் சமானன் என்ற வாயுவின் பணிதான் சமான விருத்தி, அதற்கு எத்தனையே கருவிகள் சரீரத்தில் உள்ளன. அந்த கருவிகளைக் கட்டுப்படுத்தும் பணியினை மேற்கொள்வது தான் சமானன்.

அபான விருத்தி என்றால், அபான வாயு என்பது தொப்பூழ் முதல் பாதம் வரை இதனுடைய ஆதிக்கம் உள்ளது, இது கீழ் நோக்கிய வாயு என்பது உங்களுக்குப் புரியும். அதனுடைய நோக்கம் மேலிருந்து கீழ் வருவது. அது மட்டுமல்லாமல் உடம்பில் உள்ள அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றுவது. வியர்வை. பீழை. காதுக் குரும்பை, மூக்குச்சளி, வாயில்எச்சில், மலம். சிறுநீர். ரோமம், நகம் இவ்வாறு எல்லாக் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. இதில் ரோமம் மற்றும் நகம் மட்டும் நம் உடம்பிலயே அடையாளம் கொண்டு இருக்கிற இறந்த செல்களாக உள்ளது.

அடுத்ததாக வியான விருத்தி என்பது கேசாதி பாதம்  பாதாதி கேசம் என்பது போல அந்த பிராணன் என்ற தலைமை வாயுவோடு வியானனும் உடல் எங்கும் பரவி நிற்கிறது. வியா என்று சொன்னாலே வியாபித்து என்று பொருள். பரவி நிற்பது எதோடு? பிராணண் உடல் எங்கும் பரவி நிற்பதில் அதற்குத் துணை புரிவது வியானன். இணை பிரியாத துணை.

உதான விருத்தி என்பது மூக்கின் நுனி முதல் சிரசு வரை பரவி தொழிற்படுவது. உதான விருத்தி செயல்பட வில்லை என்றால் கண் மூளை போன்ற உடலின் அங்கங்கள் செயல்பாடது நிற்கும். அதோடு மட்டுமல்லாமல் உயரக் கிளம்புவதற்கு இந்த விருத்தி காரணமாக அமைகிறது. உயரக் கிளம்புவது என்று சொன்னால் இறந்து போகும் சமயம் உயிரை வெளியேற்றிச் செல்வது,  அல்லது யோகத்திலே சூட்சும சரீரத்துடன் நாம் வெளியே செல்ல உதவுவது.

இந்த வாயுக்களின் விருத்திதான் எல்லாம் மேலும் கீழும் எனத் தங்களுடையப் பணியினை ஒவ்வொரு காரணத்தின் பொருட்டும் செயல்படுகின்றன,

பிராணன் இதயத்தின் வழியாக நுரையீரலிற்குச் சென்று இரத்தத்தைச் சுத்தமாக்கி மீண்டும் இதயத்திற்கு வந்து உடல் முழுவதும் பரவி நிற்கிறது. நக சிக பாணீயந்தம் பிராணன் இவ்வாறாக உடல் முழுவதும் பரவி இயங்குகிறது. இப்போது கண்ணனிண் சந்தேகம் தீர்ந்திருக்கும். (சீடர்களில் ஒருவரை பார்த்துக் கூறுகிறார்)
இதர வாயுக்கள் எல்லாவற்றிற்குமே பிராணண் தலைமையாக இருக்கிறது. பிராணண் இல்லாவிட்டால் ஏனைய வாயுக்கள் செயல்பட முடியாது. இதில் பிராணண். அபானன் இரண்டு வாயுக்கள் கலந்து ஒரு செயலினை மேற்கொள்ளுமானால் அவை குண்டலினி சக்தியாகும்,

தியானத்திலே மேலே செல்ல வேண்டுமானால் உதானனை நாம் ஜெயிக்க வேண்டும். இங்கே ஜெயிப்பது என்பது அதை நம்மோடு சேர்த்துக்கொள்வது என்பதாகும். அதனோடு உறவு கொள்வது என்பதே. உதான விருத்தியினை எவ்வாறு வெற்றிக்கொள்வது என்றால் தாரணை. தியானம். சமாதி என்ற சம்யமத்தின் மூலமாக மேற்கொள்வது.
இவ்வாறு உதான விருத்தியினை வெற்றிகொண்டால் நீர் மேல் நடக்கலாம், சகதி மேல் நடக்கலாம். முள்ளில் நடக்கலாம். மேலே பறக்கலாம், ஏனென்றால் மேலே எழும்புகின்ற காற்றாக உதானன் இருப்பதால் அதை சம்யமம் செய்வதால் இந்த சித்திகளை அடையலாம், அது மட்டுமல்லாமல் இந்த உதான விருத்தியால் மேலான உலகங்களைக் காணலாம், விரும்பிய உலகங்களைக் காணலாம். அது மட்டுமல்லாமல் இன்னும் ஓர் விஷயம் உள்ளது, தான் விருப்பத்திற்கு இணங்க மரணத்தை அடையலாம். உதாரணமாக மகாபாரத யுத்தத்தில் பீஷ்மர்  குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தன்  மரணத்தைத் தான் விரும்பிய காலத்தில் அடைவேன் என்று அவர் சங்கல்பம் செய்து கொண்டார், இது உதானனை வென்றதால் தான். அது போல உதான விருத்தியின் மூலம் விரும்பிய நேரத்தில் மரணத்தை அடைவது யோகிகளுக்கு சாத்தியமாக உள்ளது.

 நாம் இப்போது எந்த அளவு வந்திருக்கிறோம். (மாணவர்களைப் பார்த்து) புலன் உணர்வுகளை ஓரளவு அடக்கியிருக்கிறோம். ஓரளவு புலன் நுகர்வுகளை வெற்றி கொண்டிருக்கிறோம், அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை, நல்லுணர்வுகளை கைகொண்டிருக்கிறோம். இவற்றை இயன்றவரை கடைபிடிக்கிறோம். தியானத்தில் ஓரளவு நிலைபெற்றிருக்கிறோம்.

மனிதன் எதை விரும்பினாலும் அதை இறைவன் தருகிறார், நீ அவருடைய மகன் அல்லவா. எதை முதலில் தருவது என்று அவருக்குத் தெரியவில்லை போலும் ஏனென்றால் பல பிறவிகளில் நீ பலவற்றை கேட்டிருக் கிறாய். இப்போதாவது முடிவு செய். உனக்குத்தேவை எதுவென. நல்லவற்றை கேட்போம், அவற்றை இந்த பிறவியிலயே அடைவோம். அதற்கு சற்குரு நமக்கு அருள்வாராக.

 
மேலும் யோக தீபம் »
temple news
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரைதத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை தித்திதன் அஞ்சலரை பத்தித்து ... மேலும்
 
temple news
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple news

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழிசரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் செய்தால் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar