Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
ஓம் மந்திர வாக்கிய தத்துவங்கள் மனிதமும் சனாதனமும்!
முதல் பக்கம் » யோக தீபம்
கைவல்ய பாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2015
16:35

சூத்திரம் 1

ஜன் மௌஷதி மந்த்ர தப ஸமாதி ஜ ஸித்தய

ஜன் = என்றால் ஜன்ம
ஓளஷதி = என்றால் மருந்து , இரசாயானம்
மந்த்ர = என்றால் மந்திரம்
தப = என்றால் தவம்
ஸித்தய= என்றால் சித்திகள்

ஜன்ம என்றால் பிறவிகள்

ஸமாதி- சம்யமத்தினால் வருபவை. ஒருவனுக்கு பிறவிகள் ஏற்பட்டவுடனயே அஷ்ட சித்திகள் கிடைத்து விடுகின்றது. அந்த சாதகன் முன்பிறவிகளில் அதற்கு தேவையானவற்றை செய்து விட்டதால் பிறக்கும்போதே அதற்குரிய சித்திகளுடன் பிறக்கிறான்.

ஓளஷதி - மருந்திற்குப் பெயர் இரசாயனம் என்றும் சொல்வார்கள், இரசாயனத்தினால் கிடைக்கப்பெறும் பலன். அது என்ன என்றால் காய கல்பம் என்றும் சொல்வார்கள், நீண்ட நாள் அவன் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்து தவம் செய்யும் பொருட்டு இறவாது இருப்பதற்காகச் சாதகன் எடுத்துக்கொள்ளக்கூடிய இரசாயனங்களின் கலவையாகும். அவ்வாறு உள்ளவை இருக்கின்றன. அதனால் நீண்ட நாள் வாழக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவதாக மந்திரத்தினால் கிடைக்கப்பெறும் சித்தி. காற்றில் பறப்பது போன்ற உணர்வு. உணர்வு மட்டுமல்ல நிஜமாகவே காற்றில் பறத்தல். மந்திரத்தினால் இது முடியும். எப்படிப்பட்ட மந்திரத்தை எவ்வாறு பயிற்சி செய்தால் இது போன்ற சித்திகள் வரும் என்பது வேறு விஷயம்.

அடிப்படையாக இருக்கும் ஓம் மந்திரத்தை பல வருடங்கள் இடைவிடாது சாதகன் ஜபம் செய்தாலே இதுபோன்ற சித்திகள் அவனுக்கு கிடைத்து செயல்பட ஆரம்பித்துவிடும்.

 அடுத்ததாக தவ வலிமை என்ற தபஸ் - விஸ்வாமித்திரர் உட்பட பல ரிஷிகள் தவநிலையில் அமர்ந்தார்கள், அந்த தவத்தின் காரணமாக பல அரிய சக்திகளை அவர்கள் பெற்றார்கள், உதாரணமாக விஸ்வாமித்திரர் திரிசங்கு மன்னனுக்காக ஒரு சொர்க்கத்தையே படைத்தார், இதற்கு காரணம் மிகப்பெரிய தவ சக்தி, ஐவகை சித்திகளில் இது தனி வகை, சமாதி சித்தியின் மூலம் கிடைக்கின்ற மஹரிஷிகளிற்குக் கிடைக்கின்ற சக்திதான் இதற்கு காரணம். ஐந்தாவதாக சம்யமத்தால்  கிட்டுவது. அந்தந்த இடங்களில் சம்யமம் மேற்கொள்வதால் கிடைக்கும் சித்திதான் சமாதி ஜ சித்தி.

முதலில் சமாதியினால் ஒரு சித்தி கிடைத்தது, அந்த சித்திதான் தவ வலிமையைக் கொடுத்தது, ஆனால் ஸமாதியினை மட்டும் கொடுக்கின்ற சித்திதான் ஸமாதி ஜ சித்தி.

மனித உடலில் இருக்கின்ற போதும், தன்னுடைய தவவலிமையினால், இறைவனுடைய அனுக்கிரஹத்தினாலும் தேவசாகரமாக மாறப்பெறுகின்றது.  

தேவ சாகரம் என்பது அது ஒரு தனிப்பட்ட சாகரம். இருந்த போதிலும் அது பிரபஞ்சத்தில் உள்ள பொருட் களினால்தான் அந்த சாகரமும் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு சாகரங்களிற்கு இடையில் என்ன ஒரு வித்தியாசம். அந்த வித்தியாசம் தான் மன்னன் திரிசங்கு சொர்க்கத்தில் நுழைய தேவர்கள் தலைவன் இந்திரனால் அனுமதி மறுக்கப்பட்டது.

சூத்திரம் 2

ஜாத்ய யந்த்ர பரிணாம ப்ரக்ருத்யா  பூராத்

ஜாத்ய யந்த்ர பரிணாம= தேவர்கள் முதலானவர்கள் பெற்றிருக்கின்ற தேவ சரீரத்திற்கு.
ப்ரக்ருத்யா  பூராத் ஸ்ரீ அவயவத்தின் அனுப்பிரவேசம்,

பஞ்ச பூத சேர்க்கை தான் இந்த மனித உடம்பு, பஞ்ச பூத சேர்க்கை தான் தோலாகவும். சதையாகவும், இரத்தமாகவும், எலும்பாகவும் உள்ளது, தேவ சாகரத்திற்கு இந்த எலும்பு. தோல். சதை இல்லாமலே அனுப்பிரவேசம் என்ற ஒன்றினால் இதே போன்ற அனுபவத்தை பெறுவதற்கு வேறு பரிமாணத்தினை உடைய பொருளாக மாற்றப்படுகின்றார்கள்,

அனு என்று சொன்னால்  ஒரு விதமான மாற்றம், ஒன்றினுள் ஒன்று கலப்பது, ஒன்றினுள்ளிருந்து ஒன்றிற்குப் பிரவேசம், செய்வது, அது போல இந்த பஞ்ச பூதங்களுடைய தன்மைகள் போன்றவற்றை விளக்க முடியாது, நமக்கு தேவர்கள் நிலை சூட்சமம், ஆனால் அவர்களுக்கு அது சூட்சம துடலம், ஆக அனுப்பிரவேசம் என்பது பஞ்ச பூத சேர்க்கையில் வித்தியாசமான சேர்க்கைகள் வருகின்ற போது தேவ சாகரமாக வருகின்றது.

யோகத்தின் மூலமாக சித்திகளை அடைகின்ற போது இந்த மனித சாகரம். தேவ சாகரமாக மாறிவிடுகிறது. யோகத்தின் பரிமாணத்திலே இந்த ஆத்மாவின் தன்மை வெளிப்படுகின்றபோது ஒரு நிரந்தரத் தடையினை இயற்கை ஏற்படுத்துகிறது, இயற்கையின் இயல்பே அதுதான். இயற்கையின் தன்மையில்தான் சாதகனாகிய நீயும் இருக்கின்றாய், ஆகவே அந்த நிரந்திரத் தடையினை மீறினால். தடை மாற்றம் செய்தால் மாற்றத்திற்குரிய அம்சங்கள் இந்த சாதகனுக்கு வந்து விடும்.

இறைவனையே சம்யமம் செய்தால் வரும் தடைகளை இறைவன் நீக்கி விடுவான், உங்கள் கருத்துப் பொருளாக இறைவனை நினையுங்கள். ஆன்மாவிற்கு உரிய எல்லா சக்திகளையும் சாதகன் பெற்றுவிடுவான்.

மானுடத் தத்துவம்

மானுட உடல் என்பது தாயின் கருவில் துவங்கி  பல தத்துவ, இயற்கை நியதிகள் மற்றும், உடல் அமைப்பின் சூட்சமங்களைக் கொண்டது. அவைகளால் தான் நம் உடல் இயக்கப்பட்டு, காக்கப்பட்டு, பின் அவை கலைக்கப்படுகின்றது. ( அதாவது மரணம் என்பதன் மூலம்) உயிர்த்தொகுதி எவ்வாறு உடலின் கண் வந்து சேர்ந்ததோ அவ்வாறே பிரிக்கப்பட்டு உயிரற்றத் துடலமாகி மீண்டும் அவை பஞ்சபூத பொருட்களாக அதன் உற்பத்திப் பொருட்களோடுச் சேர்ந்து விடுகின்றது. அதாவது பிரபஞ்சப் பொருட்களாக மாறி விடுகிறது. இதற்கான உடல் அமைப்புச் செயல்படும் காரணிகளைப் பற்றியும், மனம், வாக்கு செயல்களின் தத்துவ அரூபச் செயல்பாடுகளைக் கொண்ட காரணிகளைப் பற்றியும் இங்கு பார்ப்போம்.

உடல் தத்துவங்கள் 96

      உடலின் வாசல்கள் 9 (கண் 2, செவி 2, மூக்குத்துளை 2, வாய் 1, கருவாய் 1, எருவாய் 1)

பூதங்கள் 5 (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்)

பொறிகள் 5 என்ற ஞானேந்திரியங்கள் 5 (தொக்கு, சிகுவை,சட்ச்சு, ஆக்ராணம், சோத்திரம் என்பவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி)

கன்மேந்திரியங்கள் 5 (வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபஸ்தம்)

தன் மாத்திரைகள் 5 (இரசம், ரூபம், கந்தம், சப்தம், ஸ்பரிசம்)

தாதுக்கள் 7 (இரசம், இரத்தம், மாமிசம். மேதஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்கில சுரோணிதம் என்பன சாரம், செந்நீர், ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர்)

மண்டலங்கள்  3 (சூரியன், சந்திரன், அக்னி)

நாடிகள் 10 (இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்குணி, குரு)

பிரதான தச வாயுக்கள் (10 + 4 )

(பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்  வயிரவன் , முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் முறையே இவர்களின் செயல்பாடுகள்  ஈழை, இருமல், கை, கால், தொடர்பு , யாக்கையினை சிறக்க நிறுத்துவது, ஜீவிதனுக்கு வாகனமாகி பிராண வாயுவை தோற்றுவிப்பது. பிரணவத்திற்கு இருப்பிடமாக இருப்பது)

சரீரரம் 3 (தூலம், சூக்குமம், காரணம்)

மூவேடணை என்ற பற்றுகள் 3 (பொருள் பற்று, புத்திரப்பற்று, உலகப்பற்று)

இரயசங்கள் 5 (இரைக்குடல், செரிக்குடல், நீர்க்குடல், மலக்குடல், வெண்ணீர்க்குடல்

மூவுடல் விளக்கம்

பரு உடல் என்ற தூலம்

கண்களுக்குப் புலனாகும் மாமிச உடலான  இது ஆதிப்பிரகிருதி என்ற மண்ணியல்பால் உருவானது.

நுண்ணுடல்  

இது பருவுடலுக்குள் கண்ணிற்குப் புலப்படாமல்  நுட்பமாக உள்ளது. இது ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும், அந்தக் கரணங்கள் நான்கும்  பிராண வாயு ஒன்றும் கூடியதே நுண்ணுடல் என்ற சூக்கும உடல் ஆகும். இதனை லிங்க சாகரம் என்றும் அழைக்கப்பெறுகின்றது.

காரண உடல்

பரு உடல், நுண்ணுடல், ஆகிய இரண்டிற்கும் காரண வித்தாக விளங்குவது. இதை சஞ்சித கர்மம் (தொகை வினை) என்று கருதப்படுகிறது.

மனம் வாக்கு செயல்களின் தத்துவ அரூப காரணிகள்

குணங்கள் 3 (இரஜோ, தமோ, சத்வ)

மலங்கள்  3 (ஆணவம், மாயை கன்மம்)

அவஸ்தைகள் 5 (சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்)

அந்தக்கரணங்கள் 4 (மனஸ் புத்தி சித்தம் அகங்காரம்)

இராகங்கள்  6+4 (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் மற்றும் இடம்பம், அகங்காரம், தற்பம், ஈர்சை)

மாயைகள் 3  (சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை முறையே துட மாயை, துடவா மாயை, பகுதி மாயை)

கன்மங்கள் 3 (சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் முறையே தொகை வினை, இருப்பு வினை அல்லது நுகர் வினை, நிகழ் வினை)

கன்மங்கள் 2 நல்வினை, தீவினை (இருவினைச்செயல்கள்)

வாக்குகள் 4 (வைகரி, மத்திமை வாக்கு, பைசாந்தி வாக்கு, சூக்கும வாக்கு இவைகள் முறையே செவி ஓசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை)

சக்திகள் 6 (பரிக்கிரக சக்தி, திரோதனா சக்தி, ஆதி சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி. சிற் சக்தி)

இவைகள் முறையே வைப்பாற்றல், மறைப்பாற்றல் விளைவாற்றல், அறிவாற்றல், செயலாற்றல் அறிவாற்றிலில் புதைந்த புத்தியாற்றல்.

சுத்த வித்தை (தத்துவங்கள், காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை இவை முறையே காலம் பிறழாத நிகழ்ச்சி கலை நினைப்பு விருப்பு மதம் ஏழுணர்வின் நிகழச்சிப்பொருட்கள்)

பஞ்ச முத்திரைகள்

கேசரி -    விழிகளை நடுவில் நிறுத்தி மேல்நோக்கி சிதாகாசத்தை (அருள்வெளியில் பார்த்துக் கொண்டிருத்தல்)

பூசரி -    விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக்குறியில் நோக்குவதை பார்த்துக் கொண்டிருத்தல்.

மத்திய இலட்சணம் - கண்களை அரைப்பார்வையோடு மூடிக்கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருத்தல்.

ஷண்முகி - காதுகளையும், கண்களையும், மூக்கினையும், விரல்களால் மூடி வெளிப் பார்வையினையும், மனத்தையும் உள் முகமாக திருப்பிக் கண் விழிகளை நடுவே நிறுத்தி அமைதியுறுவது. அத்துடன் நாத பிந்து கலை  இவற்றை முறையே பிராணன், மனம், புத்தி  என்பனவற்றை  ஒன்றாய்த் தியானித்தல்.

ஸாம்பவீ - விழிகளை இமை கொட்டாமல் திறந்து பார்வையினை அருள்வெளியான சிதாகாசத்தில் நிறுத்தி அங்குள்ள விந்தையான மண்டலத்தைப் பார்த்து சொக்கியிருத்தல்.

சற்குரு மகரிஷிஸ்ரீ பதஞ்சலியின் யோகதர்ஸன்(யோக தரிசனம்)
 
இக்கட்டுரையினைப் படிக்கவிருக்கும் பெரியோர்களே, இதை நீங்கள் படிப்பதற்கு முன்பாக என் தாழ்மையான எண்ணங்களைச் சற்று செவிமடுங்கள். இதனை எழுதுகிற போது என் மனம் குறுகுறுக்கிறது. இதில் காணப்படுபவை யாவும் அடியவனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ என் கருத்துக்கள் என்றோ எண்ணி விட வேண்டாம். இதில் வரும் சொற்கள், வாக்கியங்கள், வரிகள். யாவும் வேத உபநிஷதங்கள் மற்றும் பெரியோர்- களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை அருளாளர-; களின் கூற்றுகளை சிலவற்றை சொல்லக் கேட்டும், சிலவற்றை பார்த்தும், படித்தும் சிறிது உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அங்கொன்றும். இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவையே அன்றி அடியேனால் எழுதப்பட்டது என்றோ, என் அனுபவங்கள் என்றோ, நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அதுவே உண்மை

என் மனம் இப்போது அமைதியாக இருக்கிறது. படிக்கத்தொடருங்கள்.

எதனால் எது அறியப்படுகிறதோ அதனை தர்சனம், சாஸ்திரம் என்பார்கள். அவ்விதம் தர்சனங்கள் ஆறு என சொல்லப்பட்டிருக்கிறது. இதனை சாஸ்திரங்கள் ஆறு என்றும் அழைக்கப்படும்.

சாங்கியம்
யோகம்
நியாயம்
வைசேஷிகம்
பூர்வ மிமாம்ஸை
உத்ர மிமாம்ஸை

இவற்றினை முறையே மகரிஷி கபிலர், மகரிஷி பதஞ்சலி, மகரிஷி கௌதமர், மகரிஷி கணாதர், மகரிஷி ஜைமினி, மகரிஷி வியாசர் ஆகியோர் அருளிச் செய்திருக்கிறார்கள். இவற்றில் இரண்டு தர்சனங்களைப் பற்றி சில தகவல்கள் கூறுகிறேன்.

தர்சனங்களுள் முதல் தர்சனமான சாங்கியத்தைக் கபிலரும், இரண்டாவதாக வரும் தர்சனம் சற்குரு பதஞ்சலியினுடையதாகும்.

சாங்கியம் வழியைப் பின்பற்றும் சாங்கியர்கள், இறைவன் என்றொருவன் இல்லை என்றே கூறுவதாக உள்ளது. இவர்கள் சித்தாந்தப்படி ஜீவன் சத்ரூபமாகவும் இருக்கிறான். ஆனால் ஜீவன் ஆனந்த ரூபியாக முடியாது என்பதே அவர்களின் முக்கியமான கூற்றாகிறது. எனினும் பல்வேறு தத்துவங்களைக் கூறும் அவர்கள் அத்தத்துவங் களுக்கு மேலானது ஜீவன் என்று மட்டும் கூறுகிறார்கள். அதற்கும் மேல் இறைவன் என்று ஒருவனும் இல்லை என்றே கூறுவதாக உள்ளது.

ஆனால் பதஞ்சலி மஹரிஷி தன் யோக சூத்திரத்தில் இறைவனை ஒப்புக்கொண்டேயாக வேண்டும் என்றும், இறைவன், குரு, சாஸ்திரம், இந்த மூன்றின் மேல் ஸ்திரமாக இதையே அஸ்திவாரமாக வைத்து யோக சாஸ்திரத்தை உபதேசிக்கிறார். ஆண்டவனையும், ஆன்மாவினையும் இணைப்பித்தலே, இரண்டும் ஒன்றாகி விடுதலே யோகம் என்று ஆணித்தரமாக தன் நிலைப்பாட்டினை விளக்குகின்ற- தாக அஷ்டாங்க யோக சாஸ்திரம் உள்ளது.

வேதமும், உபநிஷதங்களும் ஏனைய சாஸ்திரங்கள் அத்தனையும் இறைவனை மையப்படுத்தியே கூறுகின்றதை நம் சற்குருவும் கூறுவதில் வியப்பென்ன இருக்கிறது? இதனையும் கற்றுணர்ந்த பெரியோர்களே கூறுகிறார்கள்.

மேலும் அத்தகைய யோக சாஸ்திரத்தை முதலில் தந்தவர் பிரம்மன் என்றும், அந்த சாஸ்திரத்தை பதஞ்சலி மஹரிஷியே முதன் முதலில் மண்ணுலகிற்கும் மற்றும் விண்ணுலகிற்கும் பாஷ்யமாக தந்தவர் என்றும், பெரியோர்கள் உரைக்கின்றனர்.

இது மட்டுமின்றி ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி மொழி ஆய்வு, யோக முத்திரை, வான சாஸ்திரம் என பலப்பல நூல்களை அளித்ததற்கு இடையே மிக உன்னதமான நூல்களாக மூன்றினைத் தந்துள்ளார். சித்தம் என்பதின்; தோஷத்தைப் போக்க யோகமும், சப்தம் (ஒலி) தோஷத்தைப் போக்க வியாகரண பாஷ்யமும், சரீர தோஷத்தைப் போக்க (உடல்) வைத்திய சாஸ்திரமான சரகத்தையும் அருளினார். ஒலி இலக்கணம் படைத்த பாணினி மஹரிஷியின் வேதத்திற்கு சற்குரு எழுதிய பாஷ்யமே வியாகரணம் ஆகும்.

இதையே அடிப்படையாகக் கொண்டு மகான்கள் பரம்பரை பரம்பரையாக துதிக்கும் வணக்க ஸ்லோகத்தில் மேற்சொன்ன கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன. அச்சுலோகம்

யோகேந சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சாகரஸ்யது வைத்ய கேன
யோகாப ரோத்தம் பிரவரம் முனீநாம்
பதஞ்சலசும் பிராஞ்ஐலி ராந தோஸ்மி

மனம் என்ற ஒரு மாபெரும் போராட்டக்களத்தில் அறிவு, புத்தி, இறுதி வடிவமான சித்தம் என்ற மூன்று கூட்டணிகளின் களத்தில் மானுடம் சுயம் இழந்து சஞ்சித, ப்ராரப்த கர்மாக்களின் விளைவுகளை ஏற்கச் செய்யும் படியான பிறவினை உண்டு பண்ணும் கன்மாவினை செயலழிக்கச் செய்வதற்கும், ஆன்ம ஒளியினை உணர்ந்து தன் தலைவன் இறைவனோடு தன்னைக் கலக்கச் செய்யும் மிகச்சிறந்த வழியான யோகக்கலையினை உபதேசித்த ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் சாஸ்திரத்திற்கு மேல் இவ்வுலகில் மானுடத்திற்கு உதவும் கரங்கள், வேறு எதுவும் இல்லை என்பதே அனைத்து அருளாளர்களின், கூற்றாய் உள்ளது.

கீதை சொன்ன கண்ணணின் யோகமும் இதுவே அல்லவா!

ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் சித்த அம்சத்தில் அவரது காலம் வியாசருக்கு சம காலமான துவாபர யுகத்தின் முடிவில் ஏறத்தாழ 5000 முதல் 6000 வருஷத்திற்குள் இருக்கலாம் என கடலங்குடி பெரியவர் நடேச சாஸ்திரிகள் கூறுவதாக உள்ளது. எனினும் பதஞ்சலி மகரிஷிக்கு மூன்று முகங்கள் இருப்பதாக புராணங்களும், சில சாஸ்திரங்களும் சொல்கின்றன.

முதல்முகம் - ஆதிசேஷன் என்றும்,

இரண்டாவது முகம் - கிருஷ்ணாவதாரத்தில் பலராமர் என்றும்,

மூன்றாவதாக - பதிணெண் சித்தர்களில் ஒருவராக சித்தாம்சத்தில் பதஞ்சலி முனிவர் என்றும் விளங்குவதால் இவர் வாழ்ந்த காலம் என்றோ, இவர் ஆயுட்காலம் என்றோ, கூறுவதற்கு என்ன இருக்கிறது......???

ஸ்ரீ பதஞ்சலி யோகம் (இயம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரணை, தியானம், சமாதி)  என்ற அஷ்டாங்க யோகத்தில் 196 சூத்திரங்கள் எனப்படும் விஞ்ஞான மதத்தின் மன வேதத்தின் பகுதிகள் சமாதி, சாதனா, விபூதி, கைவல்யம் என நான்கு பாதங்களுள் மானிட தத்துவத்தையும் இறையின் சத்திய வடிவினையும் விளக்குகிறது.

இந்த யோகத்தினை ஒரு குறிப்பிட்ட கால வரையில் கற்க முடியாது என்றும் இச்சூத்திரங்களுக்கு இதுவரை தற்காலத்தில் உரை செய்தவர்கள் அனைவருமே, ஒரு சவாலாக ஏற்று அவரவர்கள் ஞானத் தெளிவின்படி எழுதியிருக்கிறார்கள். இதன் புகழையோ, அக்குறள்களின் உண்மையான சரியான விளக்கத்தையோ, முழுதும் கூறி விட முடியாது என்றே, அவரவர்கள் கருத்தும் தெரிவித்துள்ளனர்.

ஒருவாறாக பெரியோர்களின் விளக்கத்தின்படி இதனை கற்கலாம் என்றால்  விடாத முயற்சியும், வைராக்கியமும், (திடசிந்தை) கொண்ட சாதகர்கள் தொடர்ந்து அப்பியாசம் (பயிற்சி) இன்றி வெற்றி பெற முடியாது.

ஏற்கனவே சொல்லப்பட்ட மனக்களத்தின் கண் சதா நிலை கொண்டிருக்கும் புலன்களின்; கூட்டுச்செயல், புயல் போன்று, மனிதர்களை அலைக்கழிக்கும் கிலேசங்களின் நிலை கொள்ளலிருந்து மனதை மீட்டு, சித்தத்தை அமைதியடைச் செய்ய யோகம் ஒன்றே உலக வாழ்க்கைப் பேரிடர்களில் நம்மைக் காக்கும் மகா  சக்தியாகும்

மனித வாழ்க்கைப்பயணம் அவனறியாமலே தொடங்கி, அவனறியாமலே முடிந்தும் விடுகிறது. இதற்கிடையே அவன் அனுபவிக்கும் துக்கம், துயரம் பலப்பல உடல் நோய், மன நோய், இறுதியில் மரணம், எனப் பெரிதும் அமைதியின்றி அமைவதே விதி என்றாகிறது.

இருவினை: இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு ஆக்கம்-அழிவு, பெருமை-சிறுமை, நன்மை-தீமை, அறிவு-மூடம் போன்ற ஆயிரமாயிரம் இருமைகளையும் அதன் பண்புகளையும் பற்றி மனிதர்களுக்கு உணர்த்துவதற்கு வேதம் அதன் நுணுக்கங்கள் மூலமும், அமானுஷ்ய யோக சித்தி பெற்ற சித்தபுருஷர்கள் இவர்களாலும், கூறப்பட்ட மேற்;சொன்னவற்றி லிருந்து மீளுதற்கு சொல்லும் வழிகள் தான்.  மனிதர்கள் சோர்ந்திருக்கும்போதும், தெளிவற்றிருக்கும் போதும் அவனை அவனால் கண்டுகொள்ளச் செய்யும் தத்துவ மூலங்களாகும்.

மனிதனின் சாதாரண வாழ்வியல் தத்துவங்களும் அசாதாரண மெய்ஞான தத்துவங்களும் ஏறத்தாழ மனிதத்தை ஏதோ ஒரு யுக்தியின் வழியில் நடத்திச் செல்வதாக இருக்கின்றன. எனினும் இவற்றினுள் நிலைத்த அல்லது அழியாத ஒரு பொருளைக் கண்டு கொள்ளுதலும் அல்லது அதனால் ஏற்படும் வித்தையை (மிகு அறிவை) சித்தர்கள் நமக்கு பல்வேறு நிலைகளில் உணர வைத்திருக்கிறார்கள். அவற்றுள் யோகமே மிகச் சிறந்த அழியாத வஸ்துவான பூரணத்தைக் காட்டுவதாகும்.

பயிற்சி முறைகளாலும், வைராக்கியம், திடசிந்தை போன்ற தொடர் இயல்புகளாலும் மட்டுமே அணுகுவோர்க்கு அனுகூலம் தருவதாய் இருக்கும். அரிய யோக வேதம் அல்லது யோகக்கலை அல்லது யோக சாஸ்திரம் மட்டுமே மனிதத்தின் உண்மையான நிலைத்த வெற்றிக்கு (முக்திக்கு) வழிவகுக்கும்.

இந்த உடல் நன்றாக இருக்கும் போதே இந்த உடலைக் கொண்டு நிகழ்த்தக்கூடிய அரிய யோக நெறியைக் கற்றுத் தேர்ந்தாக வேண்டும். உடல் நலிவு, முதுமை, பிணி, பிற சிறு சிறு தொடர் தொல்லைகள் நேர்ந்துவிட்டால் உடலைக் கொண்டு செயல்படக்கூடிய எவையும் பயன் தராது. இப்பூத உடல் நலமுற்று இருக்கும்போதே இறையாற்றலைப் பெறுவதற்கு உகந்த கல்வி முறையினைக் கற்று உள்ளத்திற்கும். உயிருக்கும் உறுதுணை தேட வேண்டும். இதனைத் திருமந்திரம்

நிற்கின்ற போதே நிலையுடையான்; கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்றிலாத மணி விளக்கே.

                       என்று கூறுகிறது

அறிவிருந்தும், மனமிருந்தும் பயன்படுத்தாத மனிதர்களை  உயிரோட்டமில்லாத உணர்ச்சியற்ற வஸ்து என்றும் அல்லது உணர்வுகள் பொங்கும் உயிரோட்டமுள்ள வஸ்து என்றும் இருவிதமாக ஏன் கூறக்கூடாது?

மனது, ஆன்மாவாகி விடாது. மனது நினைவுகளும், உணர்வுகளும் கலந்த ஒரு ஜடப்பொருளே. ஏனெனில் அது எப்போதும் மற்றொரு ஜடப் பொருளைத்தான் சார்ந்து இருக்கிறது.

ஐந்து இந்திரியங்களுக்கு ஐந்து உணர்வு களும், ஆறாவது புலனான மனது என்பது நினைப்பதற்கும் உணர்வதற்கும் தீர்மானிப்பதற்கும், கண்ணில் படும் இப்புவியும் பிரஞ்சமும், ஜீவர்களுக்கு என்றும் நிலைத்தது போல் தோன்றும் தோற்றமும் அளிக்கிறது. அதன் விளைவே அவனது ஞான அறிவினை மழுக்கி மறைத்து வைத்துள்ளது. மேலும் நிலைத்தல் நிலையாமை கொள்கை களையும் அறியவொட்டாது தடுத்து நிறுத்துகிறது.

இப்பிரஞ்சம் ஒரு தொகுப்பு அல்லது கலவை அதை தனித்தனியே பிரித்து விட்டால் பிரபஞ்சம் என்ற எதுவும் மிச்சமாய் இருப்பதில்லை. பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு? நாம் பார்க்கும் அனைத்து கூட்டுத் தொகுதியில் மனிதனுடைய தனி இடமும், பங்கும் என்ன? இப்படைப்பு முழுமைக்கும் மனிதனோடு என்ன தொடர்பு? மனிதன், தன்னை ஒரு மகத்  என உறுதியாக உணர்வானேயானால், பிரஞ்சத்துள் நான் அடக்கம் என்றால், அவனுள் பிரபஞ்சமும் அடக்கம். மேலும் தானே பிரஞ்சப் பொருளால் ஆனவனாய்க் காணில்;, பிரபஞ்சத்தில் அவனால் நிகழ்த்தக் கூடியது எது, அவனாலும் ஒரு பிரஞ்சத்தைப் படைக்க முடியாதா?

இரசாயனம், பௌதீகம், தாவர இயல், உயிரியல், வானியல், புவியியல், மன சாஸ்திரம், ஜோதிடம், மருத்துவம் இந்த ஒன்பதைப் பற்றியும் விஞ்ஞானக் கூற்றைக் கூறுவதாயின்

இரசாயனம்: எந்த எவ்வெவ்வகையான எண்ணற்ற மூலப்பொருட்களால் எவ்வாறெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து எண்ணற்ற ஜடப் பொருளை உருவாக்கியுள்ளவை என்றும்,

பௌதீகம்: எல்லாவிதமான சக்திகளும் நநெசபல னகைகநசநவெ  இயற்கை விதிகளும் (யேவரசந ழக டயற) இப்பிரபஞ்ச நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன என்றும்,

தாவர இயல்: தாவர வர்க்கங்களில் எண்ணிக்கை மருத்துவ குணம், இயற்கைச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் பிரிவுகளை அதன் தன்மைக்கு ஏற்றவாறு ஆய்வு செய்கின்றன எனவும்,

உயிரியல்: ஜீவராசிகள் என்ற அனைத்து பிராணிகள் அவற்றின்; வகைகள் இனம், குணம் அவற்றின் எண்ணிக்கை போன்றவற்றையும், இயற்கைச் சங்கலி போன்ற இதர இயல்புகளையும், கூறுவதுபோல்,

புவியியல்: பூமியின் மேற்புறத்தோற்றம் அதன் உட்புறத் தோற்ற்ம் உயிர்கள் தோன்றி வாழும் (உயிர்வாழி) கிரகம் மற்றும் அதன் இயற்கை வளம் அமைப்பு என்பதனை பற்றிக் கூறுவதாயும்,

வானியல்: பழங்காலந்தொட்டு இன்றளவும் பேசப்படுகின்ற கோள்களையும் புதிதாய் கண்ணுற்ற (கண்டுபிடிக்கப்பட்ட) புதிய கோள்கள், நட்சத்திரங்களைப் பற்றி அவைகளின் பரிமாணம், ஒன்றுக்கொன்று கொண்டுள்ள இடைவெளி ஒன்றை ஒன்று சுற்றி வரும் பாதை அதற்கான காலம் மற்றும் அவற்றின் ஈர்ப்பு சக்தி, வெளியேற்றும் சக்தி, அதனால் ஏற்படும் பாதிப்பு அல்லது பலன் இவ்வாறாய், பல்வேறு தகவல்களை சேகரித்துத் தருவதாயும், தொடர்ந்து ஆராயப்பட்டுவரும் முழு பிரபஞ்ச உண்மைகளை ஆய்ந்தறிய துடிக்கிற நிலையிலும் இவைகள், யாவும்  ஏனைய அனைத்து இயல்களும் மனிதத்தோடு எவ்வகையில் தொடர்புற்றிருக்கிறது, மாறுபடுகின்றன. பாதிக்கப்படுகின்றன. பலன் தருகின்றன என்றெல்லாம் பார்க்கும் போது விஞ்ஞானத்துடன் ஒரளவு சாஸ்திர சம்பந்தத்துடன் கூடிய ஜோதிட இயல், மன இயல், மற்றும் மருத்துவம், உடற்கூறு சாஸ்திரம் என்பதெல்லாம் படைப்பின் ரகசியங்களை வளரும் விஞ்ஞானத்தால் இன்றும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் நிலையில் நாம் மெய் ஞானத்தின் தூண்டுதல்களால் யாவற்றிற்கும் ஒரு இறுதி வினா-விடையாக இறைவன் - உளன்? ஏதோ ஒரு அடிப்படைப் பொருளாக, ஒரு இருப்பாக இருந்து கொண்டு,அந்த அடிப்படைப் பொருள் யாது எனக்கான இயலும் போது மேற்கண்ட ஒன்பது விஞ்ஞான ஆய்வுகள் தொடர்ந்து  செல்லாமல் நின்றுவிடுகிறது. அந்த அடிப்படைப் பொருளும் இந்தப் பிரபஞ்சத்தை மட்டுமல்லாது அதனுள் உயிருடன், அல்லது ஜடமாக இருக்கும் அத்தனையும் உண்டாகக் காரணமானது என்பதனை மெய்ஞானத்தால் யோகத்தின் வழியாக அறியப்பட்டது. எனும்போது காலமயமான இறைவனைக் காண்பது அதே யோக ஆற்றலால் தான் என ஊகிக்கலாம்.

உயிர்க்கடிகாரம்

பிரபஞ்ச பிரம்மாண்டங்களிலிருந்து பரமாணு வரை அப்பரமாணுக்குள் இருக்கும் அசைவுகள் வரை திட்டமிட்டபடி கால கதியில் இயங்கி வருவதால் நுண் நொடி முதல் பரார்த்தம் வரை காலத்தின் அளவுகள் விரிந்து கொண்டேதான் இருக்கும்;. வஸ்துக்கள் (பொருட்கள்) பரிமாணங்களுடையது. பல தத்துவங்கள் வேகத்தின் அலகுகளை கொண்டது. (சத்தம், ஒலி, ஒளி) காலத்தின் நகர்வு அல்லது அலகுகள் (அளவைகள்) என்பது துவக்கம், முடிவு என இரண்டும் அதற்கு இல்லாததால் அதன் பரிமாணங்களாய் இருப்பது நடந்து முடிந்ததும் நடக்க இருக்கும் நிலைகளும் மட்டுமே. காலச் சக்கரத்தில் காலத்தின் அளவுகோல் பல உயிர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த, நிகழ்ந்து முடிந்த, நிகழ இருப்பதோடு சம்பந்தப்பட்டவையாகும். காலத்தின் உயிர்க் கடிகாரம் என்பதும் அதுவேயாகும்.

ஜீவன்கள் அக்கடிகாரத்தின்படி கால அளவுகளில் தத்தம் பணிகளைச் செய்து அவைகள் உரிய இடம் சென்றடைகின்றன. இவ்வாறே சிறு எறும்பும் அது வாழும் காலத்தில் (குறைந்த சில நாட்களில்) பரிபூரிண வாழ்வை முயற்சியால் முடித்தே செல்கின்றன. மனித வாழ்வின் பல வருட வாழ்க்கைச் செயல்கள் அதனுடைய குறுகிய வாழ்நாளில் செய்து ஒரளவு பூரண வாழ்க்கையைப் பெற்று விட்டதாக எண்ணி வாழ்ந்து முடிக்கின்றன. உயிர்க் கடிகாரம் என்பது ஜோதிட தத்துவத்தின்படி 12 இராசிகளில் பின்னப்பட்டு இருக்கின்றன. ராசி எனில் உடல் எனவும், 12 உடல்கள் சேர்ந்து ஒரு ஜீவனின் உயிர்க்கடிகாரமாய் ஆகுகிறது.

விரிவு: மேஷம், விருச்சிகம், உடலுக்கு அங்காரகன் என்ற செவ்வாய் ஆதிக்கமும்,

ரிஷபம், தூலம் என்ற உடலுக்கு சுக்கிரன் என்ற அசுர குருவின் ஆதிக்கமும்

மிதுனம், கன்னி என்ற உடலுக்கு புதனின் ஆதிக்கமும்

கடகம் என்ற உடலுக்கு சந்திரனின் ஆதிக்கமும்,

சிம்மம் என்ற உடலுக்கு சூரியனின் ஆதிக்கமும்

தனுசு, மீனம் என்ற உடலுக்கு குருவின் ஆதிக்கமும்,

மகரம், கும்பம் என்ற உடலுக்கு  சனியின் ஆதிக்கமும் இருப்பதாக ஜோதிட நிபுணர்கள்
கூறுகின்றனர்.

ஒரு ஜீவனின் உடலில் செவ்வாய் என்பது இரத்த சிவப்பணுக்களாகவும்,

குரு என்பது     வெள்ளையணுக்களாகவும்,

புதன் என்பது     பித்த நீராகவும்,

சந்திரன் என்பது     இரத்த தட்டணுக்களாகவும்,

சுக்கிரன் என்பது     விந்துவாகவும்,

சூரியன் என்பது     எலும்பாகவும்,

சனி என்பது        ரோமக் கால்களாகவும்,

இராகு, கேதுக்கள் நாளமில்லாச் சுரப்பிகளாகவும் செயல்படுவதாக ரிஷிகள் கூறுகின்றனர்.

27 நட்சத்திரங்கள் அறிவு பலன் (விவேக பலன்கள்) எங்கு தோன்றுகிதோ அதன்படி அந்த ஜீவனின் அறிவு செயல்படுகிறது.

உடலுக்கு ஆதாரமான உயிர் எனப்படும் இலக்கினம், பூர்வாதாரம் ஆகும்.

இலக்கினமும், இராசியும் உயிர்க் கடிகாரத்தின் ஆதாரமாகும்.

ஜீவன்களின் உயிர்க் கடிகாரம் ஜீவாத்மாகும்.

காலச் சக்கரம் பராமாத்மாவாகும். கிரகங்களின் சுழற்சி கால மயமாகிறது.

இக்காலம் மனித வாழ்நாளில் ஒருவகை அங்கமாகிறது. இவ்வுடலைக் காப்பதற்கும் அதன் மூலம் ஆன்ம தரிசனம் கண்டு இறையானுபூதி  பெறுவதற்கும் யோகம் பேருதவியும் நிச்சயமான வழியுமாகிறது.

யோக பலன் அல்லது வெற்றி நிலையில் காலம் தனது முகவரியை இழக்கிறது. எனவே அறிவு  பிரபஞ்ச முகமாய் பிரபஞ்சத்தைச் சார்ந்தும் அறிவு, உடல் என்ற முகம்  உடலை சார்ந்தது. அறிவு என்ற (பேரறிவு) முகம் ஆன்மாவைச் சார்ந்ததாகிறது.

உயிர்ப்பொருளும், அறிவுப்பொருளும்

அறிவு பிரபஞ்சப் பொருள் என்றும், பிரபஞ்சப் பொருள் பிந்துப் பொருள் என்றும், பிந்துப் பொருள் ஒளி என்றும் ஒளிப் பொருள் ஒலிப் பொருள் என்றும், ஒலிப் பொருள் உயிர், ஆன்மா என்றும் ஆகிறது.

ஔவைமுனி தன் ஞானக்குறளில் இதனை

எல்லா பொருளும் முடிக்கலாம் ஈசன் தன்
தொல்லையருள் பெற்றக்கால்

அக்னி, சூரியன், சந்திரன், பிரணவக்கலை  சாக்கிரம் என்ற நனவுநிலை.

நனவு என்பது சூட்சமம் என்ற உலகில் நனவு.

துறவு என்றால் தொடர்பு யாவற்றைவும் அறுப்பது.

மிளகாய்ச் செடியில் பச்சை நிற இலை முதல் மிளகாய்ப்பழம் என்ற சிகப்பு வரை பரிணாம வகை என சிறு செடி, இலை, கொப்பு, பூ, பிஞ்சு, காய், பழம் எனப்  பல்வேறு தொடர்புகளையுடையதாக இருப்பினும் அச் செடியின் பழம் என்ற பலன் தரும் நிலையில் செடியின் தொடர்பு அற்றுவிடுகிறது.

இறைத் தொடர்பு எனில் யாவற்றையும் பெறுவது.

இவ்வுடல் இருக்கும்போதே சூட்சமத் தொடர்பும், ஆன்மாவின் உதவியால் இறைத் தொடர்பும் பெற்றிட வேண்டும். இவ்வகை நிகழ்வுகளைச் சொல்லுதல் எளிதெனிலும் விளக்குதலும், பயனடைவதும் சற்று கடினமே. எனவே இதனை எளிமையாக்குதற்கு யோகமே நிச்சய வழி.

ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் அவனின் உடலும், மனமும் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறது. எனினும் அவனுக்குச் சூட்டிய பெயரின் உள்ளேயிருக்கும் அவன் அவனாகவே இருந்திருக்கிறான். அவன் பருவங் களான  குழந்தை, இளைஞன், நடுநிலைப்பருவம், பின் வயோதிகம் என்ற முதுமைப்பருவம் இவற்றையொல்லம் அவன் ஒவ்வொன்றாகக் கடக்கும் போது அவனின் மனமும், உடலும், ஒரே நிலையின்றி படிப்படியாக மாற்றங்களைக் கொண்டதாகத் தொடர்கின்றன.

ஆண், பெண், இருபாலருக்கும் அவை பொதுவான தாகவும் அந்தந்தப் பருவத்திற்கு உரிய நிலையிலும் மனத்தின் செயல்பாடுகள் மாற்றங்களைப் பெற்றது. இதை உணரப்  பதஞ்சலி மஹரிஷியின் யோக சூத்திரத்தினைப் பின்பற்றி வரும் சாதகர்கள் நன்கு உணரத் தலைப்பட்டபின் அவர்கள் மனமும் உடலும் ஒரு சாதனை அல்லது அதன் மூலம் மேல்நிலை  அடைந்து மானுடத் தத்துவங்களில் உடல், மனம் என்பதிலிருந்து விலகுவது போல், அதே சமயம் அதன் உதவியால் இவ்வுடலில் சாராது, உடலின் மாற்றங்கள் மனதைச் சாராது. அவனுள் இருக்கும் ஆன்மா உடலில் அவனது சுயம் பாதிக்கப்படாது இருக்கவும், அவனுடைய நிஜ அடையாளம் என்றும் மாறாமல் பிறந்தது போல் இருந்தேன். அவனாகவே இன்றும் இருக்கிறேன். என் உடலால் மனதால் நிகழ்வுற்ற அத்தனை நிகழ்வுகளும் என்னுள்ளிருந்து விலகி நான் ஒரு சாட்சியாக மட்டும் இருப்பதை உணர்கின்றேன்.

நான் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்ல.

பிறப்பில் சம்பந்தப்பட்ட எந்த அடையாளமும் என்னுடையதில்லை.

நிர்மலமான பளிங்கு போல் தெளிந்த நிலை விஷய சம்பந்தத்தால் பல நிறங்கள்  தோன்றியது போல இருப்பினும் அதில் எதையும் கலக்க முடியாத, மாற்ற முடியாத முழு நிறைவுடைய சுத்த அறிவோடு இருக்கின்ற பரிபூர்ணத்தின் அங்கமாய் உள்ளேன்.

ஒலியாகவும் ஒளியாகவும் உருவாகவும் இருப்பதெல்லாம், காண்பதெல்லாம், உணர்வதெல்லாம் இறைவனுடைய அங்கங்களே எனப் புரிந்து கொண்டு என்றும் மாறாது என்றும் புதிதாக என்றும் ஒரே மாதிரியாக இருக்கின்றேன்.

இறைவன் அமைத்துத் தந்த சங்கேதம் என்;ற  சாஸ்திரங்களில் பேசப்படுகின்ற ஒலியானது பிரவணமே அதுவென்று உணர்ந்து பிரணவ சப்தம் என்பது இறைவனின் பெயர் என ஆய்ந்து  அறிந்து கொண்டோம்;.

அம்மா என்ற சப்தம் கேட்டவுடன் அந்தத் தாய் மகிழ்வதுபோல் ஓம் என்ற சப்தம் இறைவனை மகிழ்விக்கும் மந்திரமாய் உள்ளது என்பதையும், அதுவே இறைவனது பெயர் என்றும் அறிந்தோம்.

தஸ்ய வாசக: பிரணவ:

பிரணவ என்ற சொல், தஸ்ய =  அந்த இறைவனுக்கு, வாசக = பெயராகும். எனவே சமாதிநிலை பேரமைதியில் பிரணவ ஞான ஒங்காரத்தினுள் சென்று ஒங்கார வடிவினைக் கண்டு ஒங்காரமாகவே மாறி ஒங்காரத்தினுள் உட் கலந்துவிடுவோம். யோக தர்ஸன் இதுவாய்த் தானிருக்கும்.

ஸ்ரீ சக்கரம்
 
ஆன்மீக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும்  சௌந்தர்ய லஹரி முதன் முதலில் சிவபிரான் கயிலையில் எழுதியது. பிறகு மேருமலையில் அதனைப்  புட்பதந்தன் என்ற முனிபுங்கவன் எழுதினார்.

அதனைக் கற்றறிந்த கௌடபாதர் (பதஞ்சலி மகரிஷியின் சீடர்) ஸ்ரீ ஆதிசங்கரரிடம் எடுத்துச் சொல்லிட சங்கரர் அதனை மக்களுக்குக் காவியமாக வகுத்துத் தந்தார்.

செந்தர்யலஹரியைத் தமிழில் மொழிபெயர்த்த வீரைக்கவிராஜ பண்டிதர் அன்னை பராசக்தியின் திருவருள் பெற்ற அருட்கவியாவார். இவர் இயற்றிய பலநூல்களில் சாக்தர்கள் போற்றும் வாராகிமாலை, ஆனந்தமாலை என்ற இரு நூல்களும் அன்னையின் அருட்சக்தியைத் தரவல்லது. இக்காட்சியை ஆதிசங்கரரின் 8வது பாடலில் கூறியிருப்பதை கவிராஜ பண்டிதர் இவ்விதம் கூறுகிறார்.

ஆர் அமுது இன் கடல் வேலி செழும் தரு
வாய் மணி பம்பிய தீவு ஊடே
பார கடம்பு அடர் கானில் அருங்கொடை
பாய் மணி மண்டப வீடு ஊடே
கோர சிவன் பரமேசன் உன் மஞ்சம், ஒர்
கூர் பரி அங்கம் எனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி
தேவர்  அருந்துவர் பூமாதே!

சிவபிரான் தனக்கு எதிராக (யோகநிஷ்டையில்) இருக்கும்போது காமன் மலர்க்கணைகளை ஏவி நிஷ்டையைக் கலைத்தான். சிவபிரானின் கோபத்தினால் அவரது நெற்றிக்கண்ணினின்றும் எழுந்த தீப்பொறிகள் காமனை எரித்துச் சாம்பலாக்கியது.

அச்சாம்பலிலிருந்து பண்டாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களையும், தேவருலகையும், துன்பத்திற் குள்ளாக்கினான். இதிலிருந்து விடுபட தேவர்கள் சேர்ந்து வேள்வி ஒன்றை நடத்தினர். அவ்வேள்வியினின்றும் மஹாசக்தி அம்சமாக ஸ்ரீ லலிதாம்பிகை தோன்றினாள். அவளுக்குரிய சக்கரமே ஸ்ரீ சக்கரமென்றும், சியாமள சக்கரமென்றும், லலிதா சக்கரமென்றும் கூறுவர்.

43 முக்கோணங்களையுடைய இச்சக்கரம், மந்திர சக்தி மிகுந்த யந்திரமென்பர்.

பராசக்தியின் முழு வடிவையும், இயங்கு, இயக்கச்; சக்தியின் சின்னம் மட்டுமல்லாமல், இச்சக்கரத்தை முறையாக பூஜிப்பவர்களுக்கு, யாவற்று சக்திகளையும் அடைவர் என்பதை ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கியுள்ளார். அவர் பல இடங்களில் ஸ்ரீ  சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

1. ஸ்ரீசைலம்: ஆதிசங்கர் சக்ரப்ரதிஷ்டை செய்தவிடம்  -  ஸ்ரீ பிரமராம்பாள்.

2. ஜலாந்திரம் : கூர்ஜரம் (திரிபுரமாலினி)

யோக சூத்திரத்தை  உலகிற்கு அருளிய சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியால் விளக்கப்படும் யோக நிலைகளின் அடிப்படைக் குறியீடுகள் இந்தச் சக்கரம் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறுவர்.

பிரபஞ்ச ஸ்வரூபமாயிருக்கும்  ஓம் ஒலி அதனால் உருவான அணுச்சலனத்திற்கு ஆதாரம் என்ற மூலாதாரம் என்பது. பூமியும் அதன் கர்த்தா புவனத்தின்; நர்த்தன நாயகன். அவனே முதல் சக்கரமான நாற்சதுரபீடத்தின் இதழ்கள் நான்கு, மஹாமேருபீடம் முக்கிய (ஒலி, ஒளி, நாடிகளான) இட, பிங்கலை, சூஷ்மனா நாடிகளென்ற மூன்றினைக் காட்டுவதே (நாற்சதுரக் கோடுகள்).

சாக்தம் என்ற சக்தி வழிபாட்டில் ஆதிசங்கரர் வெகுவாக சௌந்தர்ய லஹரியில் பராசக்தியின் பெருமை களைப் பாடுகிறார்.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல், என ஐந்தொழில்களைப் புரிகின்ற, பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியவர்கள் 5 மூர்த்திகள்.

சக்தியானவள், அமுதக்கடலின் நடுவில் கற்பக விருக்ஷங்களால் சூழப்பெற்ற ரத்தினமயமான தீவில், சிந்தாமணியால் இழைக்கப்பட்ட அரண்மனையில் மஞ்சத்தில் அன்னை அமர்ந்திருக்க, அம்மஞ்சத்தின் நான்கு கால்களாக, பிரமன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், ஆகிய நால்வரும் இருப்பார்கள்.

அக்கால்கள் தாங்கி நிற்கும் மஞ்சப்பலகையாக சதாசிவன் படர்ந்திருக்க, அதன் மேல் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக காட்சிதருபருவள் அன்னை பராசக்தி.

பரப் பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியை,      ஸ்ரீகவித்யாவாகவும், அன்னையின் மந்திரத்தை ஸ்ரீவித்யை எனவும், அன்னையின் சக்கர வடிவத்தை  ஸ்ரீசியாமள சக்கரமெனவும், ஸ்ரீகலலிதா சகஸ்ரநாம, ஸ்ரீலலிதா திரிசக்தி, ஸ்ரீகாயத்திரி, ஸ்ரீ பஞ்சதசாக்ஷரி  ஆகிய மந்திர ரூபமாகவும், யோக சித்தாம்ச வடிவில் துவாத சாந்தப் பெருவெளி ஜோதி வடிவாயும் இருப்பவளாகும்.                                                                                                          
இதனைக் கண்டுணர்ந்து உலகிற்கு உணர்த்தியவர்­கள் பன்னிருவரே.

1) சிவன்
2) முருகன்
3) இந்திரன்
4) சூரியன்
5) சந்திரன்
6) அக்னி
7) குபேரன்
8) மன்மதன்
9) மனு
10) அகத்தியர்
11) துர்வாசர்
12) வாக்தேவதைகளில்; ஒருவரான அகத்தியரின் பத்தினி லோபமுத்ரா ஆகியவர்களாகும்.

ஆதித்யன், அம்புலி, அங்கி, என்ற முச்சுடர்களின் மத்தியில் ஒளிரும் அம்பிகையை 64 கோடி யோகியினிகள் வணங்குகிறார்கள். எண்ணிலார் போற்றும் தையலையை என அபிராமி பட்டர் உருகிப் பாடுகிறார்.

அம்பிகையின் ஸ்ரீசக்கரம் ஒன்பது சுற்றுக்களைக் கொண்டதாகும், நவாவர்ணம் என்பர். ஆவரணம் என்பது சுற்று,அடைப்பு எனப் பொருள் படுவதாகும்.

ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில், கூறுகிறபடி நாற்பத்தி நான்கு தத்துவங்களாக விளங்குகிற சியாமள சக்கரம் அமைப்பு.

1. பிரகாரங்கள்-3 (சதுரங்கள்)
2. மேகலைகள்-3 (வட்டங்கள்)
3. தளங்கள்-16 (தாமரை இதழ்கள்)
4. சிவ ரூப சக்கரங்கள்-4
5. சக்தி ரூப சக்கரங்கள்-5
6. மூலகாரண தாதுக்கள்-9
7. பிந்துஸ்தான மந்திரகோணங்கள்
8. எட்டுத் தளங்கள்(தாமரை இதழ்கள்)

என்று மஹாசக்திப் பிரவாகமாக விளங்கும்  ஸ்ரீசக்கரம் சூக்ஷமமான வடிவிலுள்ளதாகும். இதைப் பெரியோர்கள் மூலம் அறியத்தக்கதாகும்.

ஒன்றின் கீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய், நேர்கோணங்கள் 4.

தலைகீழ் (ஒன்றுக்குள் ஒன்றாக) ஒன்றாய் முக்கோணங்கள் 5.

முக்கோணங்கள் 14
வெளிமுக்கோணங்கள் 10
உள்முக்கோணங்கள் 10
நடுமுக்கோணம் 1 (சிறியது)
ஒரு புள்ளி 1 (சிறுமுக்கோண நடுவில்)

சிவகோணம் முன் பகர்வது ஒரு நாலு சக்தி நெறி
செறிகோணம் அத்தொடு ஒரு மருவு கோன்
நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு
நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்
இவரா நிரைத்;த  தளம் இருநாலும் எட்டுஇணையும்
எழிலாய வட்ட மொடு சதுரமாய்
உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என்
உமை பாதம் உற்ற சிறு வரைகளே.

லோக நாயகி யோக நாயகியாய், யோக நெறியின் விளக்கமாக உள்ளதே ஸ்ரீ சக்கரம் என்பா.; யோக தத்துவங்களின் விளக்கங்களாக அந்தக்கரணம், மன விருத்திகள், என எண்ணப்பரவல்களின் நிலைப்பாடு, குறித்து மேம்படுத்தும் நிலையாகும்.       

3 சதுரப் பிரகாரங்களில் ஒன்றான சித்த விருத்தி (மனமாறுதலை அடக்கி விகாரம் இல்லாமல் செய்தல்) யோகமாகும்.

மூன்று குணங்களாகிய சத்வ குண, தமோ குண, ரஜோ குண நிலைகளை மாற்றி சத்வகுண மேம்பாட்டை ஏகாக்ரஹ சிந்தையை வைராக்ய நிலையில் வைத்திருக்கும் போது கிடைக்கும் அட்டமா சித்திகளைப் பெறச் செய்யும்

அணிமா, மகிமா லஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசித்வம் வசித்வம் ஆகியவற்றை அளிக்கும் 8 தேவதைகளும், காமம், குரோதம், மோஹம், லோபம், மதம், மாச்சர்யம், புண்ணியம், பாவம் என்ற  8  தேவதைகளும் அடுத்து ஆதாரங்களான

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி;, ஆக்ஞை,சகஸ்ராரம், பரவெளி என 8 ஆதார சக்தி தேவதைகளும் 3 மேகலையாக விழிப்பு, உறக்கம், கனவு, வீடு, மோட்ஷம் என்பது சுத்த சைதன்ய ரூபமான புருஷனுக்கு அந்தக்;கரணம் முதலிய உபாதிகள் விலக்கி அவனது உண்மையான ஸ்வரூபத்தில் நிலை பெறச்செய்த நிலையில் தன்னையும் தன்னுள் அடங்கிய மஹாசக்தியை வெளிபடுத்தி உலகை உய்யச் செய்யும்         ஸ்ரீ ஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சம வடிவே இந்த ஸ்ரீ சக்கரமாகும்.

எங்கெங்கும் காணினும் சக்தியடா.... எனவும்
ஆதிப்பரம் பொருளின் ஊக்கம்--அதை
அன்னையெனப் பணிதல் ஆக்கம்
மூலப் பழம்பொருளின் நாட்டம்--இந்த
மூன்று புவியும் உனது ஆட்டம்     

எனவும் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம், இப்படி பாரதியின் பாடல் நம்மை அன்னையிடம் சரணடைய  வைக்கிறது.

சமீபத்தில் வலைத்தளத்தில் வெளிவந்த சுயம்பு ஸ்ரீசக்கரத்தின் செய்தி பிரமிப்பூட்டுவதாக, அறிவைக் கசக்கிப் பார்க்கின்றதாக உள்ளது. இந்துவாகப் பிறந்த ஒவ்வொரு வரும் படித்துப் பார்த்து பகிர்ந்து கொள்ள வேண்டிய அற்புத விஷயமிது. அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென் கிழக்கில் உள்ள மிக்கிபேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம். பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தைக் குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 மைல் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் ஒன்றைக் கண்டார். ஏதோ நாட்டின் வரைபடம் என்று நினைத்து அதைப் பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி, காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் ஸ்ரீ சக்கரம் என்பதைத் தான் அவர் பார்த்தது. அவர் தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை பார்க்க முடிந்தது. இதைப்போலவே வரைய அவர்களால்  எவ்வளவு முயன்றும் (1990 முதல் 2014) இன்று வரை முடியவில்லை. காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் அது ஸ்ரீ சக்கரம் என்றே தெரியும். ருகுழு ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன், ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை செப் 15ல் ஆய்வு செய்தனர். ஆந்த ஆய்வில் இந்த இடத்தைச் சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ அல்லது வாகனத் தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தொணீவித்துள்ளனர். இதைக் கீழ்க்கண்ட வெப்சைட் லிங்க்கில் நீங்கள் இதை விரிவாகக் காணலாம்

 
மேலும் யோக தீபம் »
temple
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை
தத்திதன் சோதரரை சித்திதன் நாதகரை
தித்திதன் அஞ்சலரை ... மேலும்
 
temple
மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற ... மேலும்
 
temple

பிராண யோகா ஏப்ரல் 18,2015

பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்பøரிள் நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் ... மேலும்
 

சர சூத்திரம் ஏப்ரல் 28,2015

சரவழி

சரம் என்பது பிராணாயமத்தில் தான் வருகின்றது.

பத்மாசனத்தில் அமர்ந்து உட்டியான பந்தம் ... மேலும்
 
அடுத்தபடியாக சுழுமுனை நாடியினைப் பார்ப்போம். சுழுமுனை நாடி என்று சொல்கிற போது அது வலது பக்கத்தில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.