வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில்களில் வைகாசித் திருவிழாவிற்கான முகூர்த்த கால்கள் நேற்று நடப்பட்டன. பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா வரும் 19ல் துவங்க உள்ளது. மண்டகப்படிகள் 12ல் துவங்குகின்றன. திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நேற்று இரவு நடப்பட்டது. முகூர்த்த கால் நடப்பட்டதை தொடர்ந்து கிராமத்தினர் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். 23ம் தேதி சனியன்று தேரோட்டம் நடக்கிறது.
* வத்தலக்குண்டு முத்து மாரியம்மன் கோயிலில் நேற்று காலை செயல் அலுவலர் ராமசாமி, தக்கார் ராஜா, விழா கமிட்டியாளர்கள் முன்னிலையில் முகூர்த்த கால் நடப்பட்டது. மண்டகப்படிகள் 12ல் துவங்குகின்றன. திருவிழா 26ல் துவங்குகிறது. 30ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.