பதிவு செய்த நாள்
08
மே
2015
11:05
கடலுார்: கடலுாரில், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 80வது வயது பூர்த்தியையொட்டி, புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. காஞ்சி ஜெ÷ யந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு 80வது வயது, வரும் ஜூலை மாதத்தில் நிறைவடைகிறது. இதையொட்டி, சமூக நற்பணிகள், நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. 80 சிவாலயங்களில் வில்வ மரக்கன்றுகள் நடப்பட்டன. கோபூஜை, பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி சிறப்பு பூஜை நடத்தப் பட்டு வருகிறது. இந்து மிஷன் மருத்துவமனை சார்பில், மாதந்தோறும் இரு முறை கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதற்கிடையே, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்கர மடத்திற்கு வ ருகை புரிந்தனர். அங்கு, ஜெயேந்திரருக்கு, விஜயேந்திரர், பல வகை மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி செய்தார். பின், ஜெயேந்திர சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் நாராயணன், விஜயலட்சுமி, வாசுதேவன், சீனுவாசன், பாண்டியன், திருமலை, கிரி சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.