பதிவு செய்த நாள்
09
மே
2015
11:05
உடுமலை : பூளவாடி, முத்துமாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா நடந்தது. உடுமலை, பூளவாடி கிராமத்தில் அமைந்துள்ளது, முத்துமாரியம்மன் கோவில். கோவிலில், சித்திரை திருவிழா மே, 4ம் தேதி, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது; அன்றிரவு திருக்கம்பம் போடப்பட்டது. மே, 5ம் தேதி காலை, கொடியேற்றம், பரிவட்டம் கட்டுதல், திருமஞ்சனம், அம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல், அம்மன் அழைப்புக்குப்பின், இரவு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மே, 6ம் தேதி, காலை முதல் மாவிளக்கு, பூவோடு எடுத்தல் நடந்தது. இரவு, திருக்கம்பம் கங்கையில் விடப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை, அம்மன் வீதியுலா, மஞ்சள் நீராட்டு நடந்தது; இரவு சக்தி கும்பம் ஆற்றில் விடப்பட்டது. நேற்றிரவு அம்மனுக்கு மகா அபிேஷக ஆராதனையுடன், சித்திரை திருவிழா நிறைவடைந்தது.