குன்னுார் : குன்னுார் வெலிங்டன் கூர்காஹில் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், 37வது ஆண்டு கரக உற்சவ விழா நடந்தது.
கடந்த, 8ம் தேதி, காலை 7:30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. மாலை 6:00 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள், மாலை 6:00 மணிக்கு நவகிரகங்களுக்கு சிறப்பு வழிபாடு, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடந்தன. நேற்று காலை கூர்காகேம்ப் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் இருந்து கரக ஊர்வலம் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக பூஜைகள், உச்சி பூஜை, கஞ்சிவார்த்தல், அன்னதானம் ஆகியவை நடந்தன. பரிசு குலுக்கல் நடத்தப்பட்டது. இன்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.