பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூரில் அப்பர் குருபூஜை விழா நிறைவடைந்தது. பண்ருட்டி அடுத்த திருவாமூரில் அப்பர் பிறந்த ஊரில் உள்ள அவரது கோவிலில் குருபூஜை திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கி 12ம் தேதி நிறைவு பெற்றது. விழாவில், 10ம் தேதி காலை 10:00 மணிக்கு கணபதி அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது, திருப்பனந்தாள் மடத்தின் இணை அதிபர் ஸ்ரீமத்சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், திருச்சி மவுன மடம் ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர். தொடர்ந்து 11ம் தேதி திலகவதியார் திருநாள் விழாவில் சிறப்பு சொற்பொழிவு, மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில் வேலுõர் தேவஸ்தானம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினர். நேற்று காலை சிவபூசகர்கள் சிவ பூஜை செய்தல்; 9:00 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும்; 10:00 மணிக்கு மகந்யாச ருத்ரஹோமம், ருத்ர அபிஷேகம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி; 11:00 சிந்தனை அரங்கம், மதியம் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு அப்பர் சுவாமி வீதியுலா நடந்தது. நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் கடந்த 3ம் தேதி முதல் அப்பர் சுவாமி சதய உற்சவம் நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. பாதிரிக்குப்பம் வெங்கடேசன் தினமும் அடியார்களின் தொண்டுகள் பற்றி சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். நேற்று முன்தினம் முக்கிய விழாவான கட்டமுது உற்சவம் நடந்தது. அப்பர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார்.