விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் பலராமர். வசுதேவரின் மனைவியானரோகிணிக்கு பிறந்தவர். அதிக பலம் பொருந்தியவர் என்பதால் பலராமர் என பெயரிட்டனர். நம்பி மூத்த பிரான் என இவரையும் நம்பி என்று சொல்வது வைணவ சம்பிரதாயம். கையில் கலப்பை தாங்கியிருக்கும் இவர் ஒருமுறை யமுனை நதியின் போக்கையே கலப்பையால் திருப்பியதாக மகாபாரதம் கூறுகிறது. ஆனந்த தேசத்து அதிபதி ரைவதனின் மகள் ரேவதியை மணம் செய்தஇவருக்கு திரிதன், உவமுகன் என இரு பிள்ளைகள். பாரதப் போரில் பலராமர் துரியோதனன் பக்கமும், கிருஷ்ணர் பாண்டவர் பக்கமும் சேர்வதாக உடன்பாடு ஏற்பட்டது. தன் அண்ணனான பலராமரைத் தவிர்க்கத் தீர்மானித்த கிருஷ்ணர், தந்திரமாகப் போருக்கு முன்பே தீர்த்த யாத்திரைக்கு அவரை அனுப்பி விட்டார்.