அயோத்தியில் நடந்த திருவிழா காண துளசிதாசர் சென்றார். வெயில் அதிகமாக இருந்தது. ஒருஆலமர நிழலில் ஒதுங்கினார். அங்கே இருதுறவியர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு ராமாயணம் பற்றியதாக இருந்தது.துளசிதாசரும் ஆர்வமாக கேட்கத் தொடங்கினார். ஒரு துறவி, வால்மீகி ராமாயணத்திற்குஇணை ஏதுமில்லை என்று சொல்ல,மற்றொருவர், உண்மை தான்! ஆனால்,பண்டிதர்கள் மட்டுமே அதைப் படித்து மகிழ்கின்றனர். சாதாரண மக்களால் அந்தபாக்கியத்தைப் பெற முடிவதில்லையே! எனவே ராம காவியத்தை யாராவதுஎளிய நடையில் இயற்றினால் உலகிற்கே நல்லது, என்றனர். துளசிதாசரின் உள்ளத்தில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. நானே அந்தப்பணியைச் செய்தால் என்ன!. உடனடியாக ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். ராமசரித மானஸ் என்று பெயர் சூட்டினார். வால்மீகி ராமாயணத்திற்கு இணையாக இன்றும் இந்தக் காவியம் போற்றப்படுகிறது.