மாரியம்மன் திருவிழாவுக்கு மே 27ல் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2015 12:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் விடும் நிகழ்ச்சிக்கு, மே, 27ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கலெக்டர் ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை: கரூர் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா மே, 10ம் தேதி முதல் ஜூன், 7ம் தேதி வரை நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே, 27 ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்வன்று, கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக, ஜூன், 20ம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.