கம்மாபுரம்: கம்மாபுரம் கிழக்கு காலனி ஜானகி அம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. அதனையொட்டி கடந்த 22ம் தேதி கணபதி ÷ ஹாமம், கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து கரகம் புறப்பாடு, ஏராளமானோர் பால்குடம், காவடி சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மறுநாள் 23ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்க நடந்த திருவிளக்கு பூ ஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். நேற்று காலை 10:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.