சிதம்பரம் மவுன மடத்தில் ஆதி குரு முதல்வர் குருபூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2015 11:05
சிதம்பரம்: சிதம்பரம் சபாநாயகர் தெரு மவுன மடம் ஆதி குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ மவுனசுவாமிகள் குருபூஜை விழா மவுன மடத்தில் நடந்தது. இதனையொட்டி ஆதி குருமுதல்வர் சன்னதியில் காலை சிவபூஜகர்களின் சிறப்பு சிவபூஜை நடந்தது. தொடர்ந்து ஓதுவார்களின் தேவராம், திரு வாசகம் கச்சேரி நடந்தது. பின்னர் மவுன மடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள், ஆதி குருமுதல்வர் மவுன சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணிக்கு மகேஸ்வர சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மவுன மடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்தார்.