கடலூர்: கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய திருவிழா துவங்கியது.கடலூர், புதுநகர் சொரக்கல்பட்டில் உள்ள புனித அந்தோணி யார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு இன்று (3ம் தேதி) முதல், வரும் 12ம் தேதி வரை தினமும் இரவு 7:00 மணிக்கு நவநாள் ஜெபம் நடக்கிறது. 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருப்பலி, 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.