பதிவு செய்த நாள்
10
ஜூன்
2015
12:06
சமயோசிதத்துடன் வெற்றி காணும் சிம்மராசி அன்பர்களே!
ராசிநாதன் சூரியன், 11-ல் உள்ள செவ்வாய் நன்மை தருவர். புதன் ஜூலை 15 வரை நற்பலன் கொடுப்பார். அதன்பின் அவர் கடகத்திற்கு வந்து நன்மை தரமாட்டார். சுக்கிரன் ஜூலை 2க்கு பிறகு சிம்மத்திற்கு மாறி நன்மை வழங்குவார். எனவே இது சிறப்பான மாதமாக அமையும்.குரு பகவான் ஜூலை 5-ந் தேதி உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குரு பார்க்க கோடிநன்மை உண்டாகும். பொருளாதார வளம் சிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் உதவி கிட்டும். நோய் விலகி பூரண குணம் காண்பீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கைகூடும். ஜூலை 2க்குப் பிறகு பெண்களால் மகிழ்ச்சி கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிரிகள் வகையில் எச்சரிக்கை தேவைப்படும். அரசு ஊழியர்களின் கோரிக்கை எளிதில் நிறைவேறும்.
கலைஞர்களுக்கு பின்தங்கிய நிலை மாறி, நன்மை மேலோங்கும். ஜூலை 2க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான நிலை காண்பர். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத இறுதியில் முயற்சிக்கவும்.
மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். ஜூலை 5க்கு பிறகு, முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். பெண்கள் கோவில் மற்றும் புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வர்.
நல்ல நாள்: ஜூன் 16, 17, 18, 22, 23, 26, 27, 28 ஜூலை 6, 7, 8,12, 13, 14, 15
கவன நாள்: ஜூலை 8, 9 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1, 9 நிறம்: பச்சை, செந்துõரம்
பரிகாரம்: விநாயகர் வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். நவக்கிரகங்களை வலம் வந்து வழிபடுங்கள். தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.