செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில், மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 1ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் 48வது நாள் நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
காலை 9:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலில் 108 சங்கு அலங்காரமும், கலச பிரதிஷ்டையும் நடந்தது. 10:00 மணிக்கு 54 திரவிய ஹோமமும், 11:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு 108 சங்கு மற்றும் கலச அபிஷேகம் நடந்தது.பூஜைகளை செய்யார் மணி அய்யர் செய்தார். இதில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.