ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்று பேச்சுவழக்கில் மக்கள் சொல்வார்கள். உண்மையில் கேது அப்படி கெடுக்கக்கூடியவர் தானா? என்றால் இல்லை என்றே பதில் வரும். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்னும் வள்ளுவரின் வாக்கின்படி கடின உழைப்பிற்குரிய பலனை கேது தரத் தவறுவதில்லை. ஸ்வர்பானு என்னும் அசுரன், மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து, நவக்கிரகங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். விநாயகர், காளி, சிவபெருமான், சித்திரகுப்தர் ஆகியோரை வழிபடுவதன் மூலம் கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். கேதுதிசை ஒருவருடைய ஜாகதத்தில் நடந்தால் 7 ஆண்டுகள் நடக்கும். கேதுதிசையோ அல்லது கேது புத்தியோ நடப்பவர்கள் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுவது அவசியம். சனியையும், ராகுவையும் விட சுபபலனையும், கெடுபலனையும் தருவதில் கேதுவே நிகரற்றவர்.