பதிவு செய்த நாள்
29
ஜூன்
2015
11:06
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த, பெரணமல்லூர் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், சனிக்கிழமை வார வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை வழிபட்டனர். மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு, இளநீர், தயிர், சந்தனம், தேன், மஞ்சள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, எடைக்கு எடை நாணயம், தானியம் வழங்கினர். முன்னதாக, காலை, 11 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில், மழை மற்றும், சகல நன்மைகள் வேண்டி, யாக வேள்வி பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்ததுறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.