பதிவு செய்த நாள்
01
ஜூலை
2015
10:07
பழநி: உலகநலன் வேண்டி பழநி கோயிலில் 108 சங்குகள் வைத்து சிறப்பு யாகபூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை நடந்தது. அதில் பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் சங்குகளில் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கலசங்கள் வைத்து, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தது. உச்சிக்காலத்தில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மூலவர் சிரசில் மஞ்சள் அன்னம் கிரீடமாக சூட்டி, வில்வம் கலந்த சுத்த அன்னம் பாதங்களில் படைக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை தீபாராதனைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை சித்தநாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், ராகவன், செந்தில்குமார், விஜயகுமார் செய்திருந்தனர். இன்று (ஜூலை 1) திருஆவினன்குடி கோயிலில் மாலை 5.30 மணிக்கு மேல் அன்னாபிஷேகம், பவுர்ணமிசிறப்புபூஜை, அருணகிரிநாதர் விழா நடக்கிறது. ஜூலை 2ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூலை 3ல் கோதைமங்கலம் சண்முகநதிக்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறும்.