திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2015 10:07
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. அன்று இரவு 8.30 மணியளவில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாணம் நடந்தது. இரவு 10 மணியளவில் சுவாமி வீதி உலாவும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.