சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் யாகபூஜை, சுதர்சன ஹோமம், பஞ்ச சூத்த ஹோமம், 1008 சகஸ்ரநாமம் ஹோமம், பக்தர்கள் தேங்காய்,நெய் ஆகியவற்றை சமர்ப்பித்தனர். பின்னர் பால் அபிஷேகம், மகா அபி ஷேகம், சப்தாவர்ண அபிஷேகங்கள் நடந்தன. சுவாமி வஜ்ர அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு லட்டு பி ரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.