பதிவு செய்த நாள்
03
ஜூலை
2015
11:07
புதுச்சேரி : நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 9ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. பகல் 12 மணிக்கு நாகமுத்து மாரியம்மன் கோவிலில் பாற்சாகை வார்த்தல், இரவு 7 மணிக்கு கும்பம் கொடுத்தல் நடக்கிறது. 10 மற்றும் 11ம் தேதி நாகமுத்து, முத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பின், 12ம் தேதி காலை 7.30 மணிக்கு நவலட்சுமி, 108 சிறுமிகளுக்கு கன்னிகாவந்தனம், நலங்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 16ம் தேதி வரை சிறப்பு வழிபாட்டு பூஜை, இரவு வீதியுலா நடக்கிறது. 1௭ம் தேதி மாலை 4.30 தேர்பவனி, செடல் உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி மஞ்சள் நீராட்டு, 19ம் தேதி ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.