திண்டுக்கல்: திண்டுக்கல் சத்திரம் தெரு, செல்வ விநாயகர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி தட்சிணாமூர்த்தி, குருபகவானுக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபர்கள் செல்வமுனியாண்டி, சண்முகம் முன்னிலை வகித்தனர். தலைவர் ஹரிஹரன், செயலாளர் சுப்ரமணியமகாதேவன், இணை பொருளாளர் மோகன்ராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வத்தலக்குண்டு: கெங்குவார்பட்டி முக்கிய பிராணசாமி ஆஞ்சநேயர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு தேன், பால் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் சுதர்சன், கோபிநாதன் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.