மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவில் பிரமோற்சவ விழா நாளை (21ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி நாளை இரவு 8:00 மணிக்கு கணபதி ஹோமம், தினசரி காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. வரும் 22ம் தேதி பகல் 12 மணிக்கு கொடி யேற்றம், 30ம் தேதி மாலை 4:00 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம், 31ம் தேதி பகல் 12 மணிக்கு செடல் உற்சவம், 108 பால்குட ஊர்வலம் நடக்கிறது.