பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
12:07
உடுமலை: ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், 68ம் ஆண்டு ஆடி மாத ஆன்மிக நிகழ்ச்சி, உடுமலையில் நடக்கிறது. உடுமலையில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், 67 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆடி மாதத்திலும் ஆன்மிக நிகழ்ச்சி, உடுமலை பகுதியில் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான இந்நிகழ்ச்சி, உடுமலை, வ.உ.சி., வீதியில் உள்ள ராமய்யர் திருமண மண்டபத்தில் வரும், 31ம் தேதி துவங்குகிறது.முதல் நிகழ்ச்சியாக, 31ம் தேதி முதல் ஆக., 3ம் தேதி வரை, ’ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம தியான ஸ்லோகங்கள்’ என்ற தலைப்பில், வேளுக்குடி கிருஷ்ணன் சொற்பொழிவும், ஆக., 4ம் தேதி, கடையநல்லுார் ராஜகோபால் பாகவதர் குழுவினரின், ’நாம சங்கீர்த்தன பஜனை’ நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.