புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் ரேணுகாம்பிகை கோவிலில் 93ம் ஆண்டு செடல் உற்சவம் நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. புதுச்சத்திரம் ரேணுகாம்பிகை கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 93ம் ஆண்டு உற்சவம் நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினமும் இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி இரவு காத்தவராயன் மோடி எடுத்தலும், 28ம் தேதி காத்தவராயன் திருக்கல்யாணமும் நடக்கிறது. முக்கிய விழாவான செடல் உற்சவம் வரும் 31ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 3:00 மணிக்கு செடல் உற்சவமும் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும், ஆகஸ்ட் 1ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.