பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
02:07
நாகப்பட்டினம்: நாகை வைத்தீஸ்வரன் கோயில், அம்மன் சன்னதியில் ஒரு குரங்கு, இரண்டு நாட்களாக உணவு ஏதும் உண்ணாமல், அழுது அம்மனை வழிபட்டது.
நாகையில் பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் பின் பிரகாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் சன்னதி எதிரே, சில தினங்களுக்கு முன்னர் குரங்கு ஒன்று வந்து வழிபட வருபவர்கள் யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் அமர்ந்து வழிபட்டது. அப்போது பக்தர்களுக்கு காட்டிய தீபத்தை சிவாச்சாரியார்கள், குரங்குக்கும் காட்டியிருக்கிறாகள். தீப தரிசனத்தை ஏற்றுக்கொண்ட குரங்கு, அங்கேயே அமர்ந்து, கண்ணீர்விட்டு அம்மனை வழிபட்டது. இது பக்தர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களாக, உணவு ஏதும் உண்ணாமல், அழுது அம்மனை வழிபடும் குரங்கை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.