புதுச்சத்திரம்: வில்லியநல்லுõர் ரேணுகாம்பிகை கோவிலில் நாளை (24ம் தேதி) செடல் உற்சவம் நடக்கிறது. புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுõர் ரேணுகாம்பிகை கோவிலில் இந்தாண்டு செடல் உற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான செடல் உற்சவம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி அன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு கழுமரம் ஏறுதலும், 4:00 மணிக்கு செடல் உற்சவமும் நடக்கிறது. 25ம் தேதி காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 5:00 மணிக்கு சாகை வார்த்தலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ÷ காவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.