திருவாரூர் சாய் பாபா சக்திபீடத்தில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2015 11:07
திருவாரூர்: திருவாரூர் சாய்புரம், வாசன் நகர் ஸ்கந்தசாய் அறக்கட்டளை சார்பில் புதிதாக ரூ.85 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்கந் தசாய் பாபா கோவில் மற்றும் தியான மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. இக்கோவிலில் 5அடி உயரத்தில் ஜெய்ப்பூரில் இருந்து ரூ.4.60 லட்சம் செல வில் பளிங்கு கல்லால் சாய்பாபா சிலை மற்றும் வெள்ளை வினாயகர், அகஸ்தியர், தத்தாத் ரேயர், ராதை–கிருஷ்ணர், நாகசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் சிலை பிரதிஷ்ட்டை தினசரி பூஜை நடந்து வருகிறது. வியாழன் தோறும் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகி ன்றனர். வரும் பவுணர்மியை முன்னிட்டு பாபாவின் அவதார தினத்தில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடக்கிறது. அதற்காக ÷ நற்றுமுன் தினம் இரவு சிறப்பு வழிபாடு, ஆரத்தி, நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கருணாநிதி உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. கோவில் அருகில் மிகவுகம் பழமையான பனை மரம் உள்ளது. இந்த மரத்தில் 11 கிளை கள் உள்ளது குறிப்பிட தக்கது. இந்த மரத்தை பாபாவின் அவதாரமாக அப்பகு தியினர் வணங்கிவருகின்றனர்.