ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி கோயில் ஆனி பிரமோற்சவம் ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைமுன்னிட்டு தோளுக்கினியான், சிம்மம், ஆஞ்சநேய, கருட, சேஷ, குதிரை, வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்தார். ஜூலை 21ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ரத உற்சவம் நடந்தது. பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை (ஜூலை 25) தீர்த்தவாரி, தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.