கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெரியாயி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கோமுகி நதிக்கரையில் உள்ள ஆற்று பெரியாயி அம்மன் கோவில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 8: 00 மணிக்கு பூங்கரம் எடுத்தல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை, சேலம் மெயின் ரோடு, கவரை தெரு, காந்தி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பூங்கரம், சுவாமி மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.