சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2011 11:07
புவனகிரி : புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாக பூஜை துவங்கியது, 2ம், 3ம், 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து மணி குருக்கள் தலைமையில் வேத விற்பன்னர்கள் சிறப்பு யாகம் செய்தனர். தொடர்ந்து தேவாங்க பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் கத்தி போடும் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்திலிருந்து வெள்ளாற்றிற்கு சென்று அங்கிருந்து புனித நீரை யானை மீது கொண்டு வந்தனர். வரும் வழியில் வங்காளத்தான் சந்து, புதுத்தெரு, பெரிய தேவாங்கர் தெரு, சின்ன தேவாங்கர் தெருக்களில் வசிக்கும் தேவாங்க பக்தர்கள் கைகளில் கத்தியுடன் வலம் வந்து அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் உடலில் கத்தி போட்டுக் கொண்டனர். கத்தி போடும் திருவிழா வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் கோவில் வளாகத்தில் அம்மன் அருள் குறித்து சிறப்பு சொற்பொழிவு பல்வேறு தலைப்புகளில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை சிவகுமார் தலைமையில் தேவாங்க பக்தர்கள் செய்து வருகின்றனர்.