பதிவு செய்த நாள்
07
ஆக
2015
11:08
திண்டுக்கல் : 800 ஆண்டு பழமையான தோற்றத்துடன் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் பழமை வாய்ந்தது. கோயில் சிதிலமடைந்ததால் முழுவதும் இடிக்கப்பட்டு 2013 ஜூனில் திருப்பணிகள் துவங்கின. ஒரு ஏக்கரில் ௮௦௦ ஆண்டுகள் பழமையான தோற்றத்தில் திருப்பணிகள் நடக்கின்றன. இதற்காக ரூ.20 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. நெல்லை கருங்குளம், கன்னியாகுமரி மயிலாடியில் இருந்து 11 ஆயிரம் டன் கற்கள் கொண்டு வரப்பட்டு சிற்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்தபதிகள் ரமேஷ், பாஸ்கரன் தலைமையில் 80 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலில் ஹானபிம்கை, காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வர், அபிராமி அம்மன் என நான்கு மகா சன்னதிகள் உள்ளன. இவற்றில் முழுக்கால் வேலைப்பாடுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றிலும் விநாயகர், சோமசுந்தர், நாயன்மார்கள், கணபதி, மகாலட்சுமி வரதராஜபெருமாள், தண்டபாணி, வள்ளி தெய்வானை முருகன், நடராஜன், நவகிரகம், சுவாமி அம்மாள் பள்ளியறை சன்னதிகளும் உள்ளன. சிறிய தெப்பக்குளமும் புதிதாக உருவாக்கப்படுகிறது.
வெளிச்சம், காற்றோட்டத்திற்காக அர்த்த மண்டபங்களில் ஜாலமும், மேற்கூரையில் பர்கோலாவும் அமைக்கப்பட்டுள்ளன. 300 டன் கல்காரத்துடன் 52 அடி ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு யாளி, எட்டு அனுவித்தி உட்பட ௪௮ துாண்கள் உள்ளன. ஒவ்வொரு துாணிலும் 12 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடவுள் அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. விசிறி பாவுகல் மூலம் மேற்கூரை வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.
வேலைப்பாட்டில் அதிசயம்: பொறியாளர் ஆர்.சுந்தரம் கூறியதாவது: திருப்பணிக்காக தமிழகம் முழுவதும் 20 பழமையான கோயில்களை பார்வையிட்டோம். 800 ஆண்டு பழமையுடன் கோயில் கற்சிற்பங்களை வடிமைத்து வருகிறோம். சில தினங்களுக்கு முன் தான் மலைக்கோட்டையில் உள்ள விக்ரகம் இல்லாத அபிராமி அம்மன் கோயிலை பார்த்தோம். அதைப் போன்றே, தற்போது கட்டப்படும் கோயிலின் வேலைப்பாடும் இருந்தது அதிசயமாக இருந்தது. ஆறு மாதங்களில் திருப்பணிகள் முடிந்துவிடும் என்றார்.