புதுச்சேரி: திலகர் நகர் நவசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி பேட்டையான்சத்திரம் திலகர் நகர் நவசக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த ஆடித்திருவிழா கடந்த 6 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 8ம் தேதி சாகை வார்த்தல், கும்பம் கொட்டுதல், அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நான்காம் நாளான நேற்று காலை 8 மணிக்கு புதிய திருத்தேரில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று 10ம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு வீதியுலா, கொடி இறக்குதல் நடக்கிறது.