வடலூர்: குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அ ருகே உள்ள புத்து மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் உற்சவத்தையொட்டி, கடந்த மாதம் 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொட ங்கியது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. கடந்த 7ம் தேதி செடல் விழாவில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 8ம் தேதி தேரோட்டம் நடந்தது. அமைச்சர் சம்பத், எம்.பி., அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துõர் ராஜேந்திரன், சிவசுப் ரமணியன், அறநிலையத் துறை இணை ஆணையர் வாசுநாதன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். ஒன்றிய செயலர் கோவிந் தராஜ், சேர்மன் டாக்டர் சண்முகசுந்தரம், துணை சேர்மன் மல்லிகாதங்கப்பன், பேரூராட்சி தலைவர் முத்துலிங்கம் பங்கேற்றனர்.