மூங்கில்துறைப்பட்டு: கானாங்கட்டியில் உள்ள முனியப்பன் சுவாமிக்கு முப்பூசை விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்கட்டி பகுதியில் ஆண்டுதோறும், ஆடிமாதம் முனியப்பன் சுவாமிக்கு முப்பூசை விழா நடந்து வருகிறது. அதேப்போல் நேற்று நடந்த முப்பூசை விழாவை, பெரியகொல்லியூர், புஷ்பகிரி, கானாங்காடு ஆகிய மூன்று கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தினர். மதியம் 2:00 மணிக்கு சுவாமிக்கு அருகில் உள்ள ஏரியில் இருந்து சக்தி அழைத்து வந்தனர். அதன்பின் சுவாமிக்கு கண் திறந்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அவர்களின் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுத்தனர். மூன்று கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர்.