வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2015 11:08
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற துர்க்கை அம்மன் பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை நகர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலை சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணா மூர்த்தி, துர்க்கை அம்மன் எழுந்தருளியுள்ளனர். துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைசிறப்பு பூஜை நடக்கிறது. ஆடி மாதத்தில் வரும் மூன்றாவது செவ்வாய்க் கிழமை என்பதால், நேற்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.