சூலுார்: பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில், 13ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. சாரதா சேவா சமிதி சார்பில், இந்த பூஜை நடந்தது. சுவாமி கேசவானந்தர் தலைமையில், சாரதா சேவா சமிதியை சேர்ந்த சந்திரா திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தார். சுவாமி ராமானந்தர் அருளாசி வழங்கி பேசுகையில்,திருவிளக்கு வழிபாட்டால் சமுதாயத்தில் ஒற்றுமை வளரும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். விளக்குபூஜை உள்ளிட்ட கூட்டு வழிபாடுகள் நடத்துவதால், ஆன்மிக எழுச்சி உண்டாகும், என்றார். ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர். அனைவருக்கும் மங்கள பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.