பதிவு செய்த நாள்
14
ஆக
2015
10:08
வண்ணாரபேட்டை: வண்ணாரபேட்டை வெள்ளேரி அம்மன் கோவிலில், கடந்த, 9ம் தேதி, காப்பு கட்டுதலுடன் ஆடித்திருவிழா துவங்கிய நிலையில், இன்று அலகு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வண்ணாரபேட்டையில் உள்ள வெள்ளேரி அம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 9ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் அலகு போடுதல், 8:00 மணிக்கு துக்காலம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகமும், மாலை, துக்காலம்மன் திருக்கோவிலில் பூ க்கரக ஜோடனை, இரவு, 7:00 மணிக்கு கரகம் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை காலை, 7:00 மற்றும் இரவு, 7:00 மணிக்கு அம்மன் பூக்கரகம் தி ருவீதி உலா; ஆக., 16ல், அம்மனுக்கு பூஜை, சிறப்பு தங்கக் கவச அலங்காரத்துடன் மகா மங்களாரத்தி; இரவு, பச்சை கரகத்துடன், தேர் திருவிழா நடக்கிறது. ஆக., 18ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, அம்மனுக்கு சாந்தி பூஜை நடக்கிறது. பூஜைகளை, அர்ச்சகர் தியாகராஜ சிவாச்சாரியார் நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை, எஸ்.டி.எஸ்., கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.