ஊத்துக்கோட்டை: வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தை ஒட்டி, உற்சவர் அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். ஊத்துக்கோட்டை சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தை ஒட்டி, நேற்று முன்தினம், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந் தன. பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.