பதிவு செய்த நாள்
18
ஆக
2015
11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, நள்ளிரவில் பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆடிப்பூரம் விழா, கடந்த, 10 நாட்களாக சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் வேலைகளில் வெவ்வேறு வாகனங்களில், ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு, ராஜகோபுரம் அருகே உள்ள வளைகாப்பு மண்டபத்தில், பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல் மற்றும் துணிகள் வழங்கினார். நள்ளிரவு, 12 மணிக்கு, கோவில் அம்மன் சன்னதி முன் தீ விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.