பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கொள்ளுமேடு அங்காள பரமேஸ்வரி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 17ம் தேதி விக்னேஸ்வர பூஜையும், 18 ம் தேதி கணபதி ஹோமமும், முதல் கால யாகசாலை பூஜை 19 ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேகத்தினமான நேற்று (20ம் தேதி) நான்காம் கால யாகசாலை பூஜை நாடிசந்தானம் கடம் புறப்பாடாகி காலை 9:05 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக் குழவினர்கள் செய்திருந்தனர்.