வாமனராக வந்த மகாவிஷ்ணு, பலிச்சக்கரவத்தியிடம் யாசகமாக மூன்றடி கேட்டார். அதை நினைவூட்டும் விதத்தில் ஆண்டாள் திருப்பாவையில் மூன்று முறை உலகளந்த பெருமாளின் பெருமையைப் போற்றுகிறாள். முப்பது பாடல்களில் 3,17, 24 ஆகிய மூன்று பாசுரங்களில் (அடுத்தடுத்த பத்து பாடல்களுக்குள் ஒன்றாக) ஓங்கி உலகளந்த உத்தமன், அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர், அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்று குறிப்பிடுகிறாள். இவற்றைப் பாடினால் மழைவளம் சிறக்கும் என்பர்.