காரைக்கரால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2015 12:08
காரைக்கால்: காரைக்கரால் கைலாசநாதர் கோவிலில் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட நிகழ்வை நினைவு கூறும் ஆவணி மூல உற்சவம் நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா நேற்று நடந்தது. இதில் ஆவணி மூல நட்சத்திரத்தில் பழங்காலத்தில் பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்தபோது பெருமழை காரணமாக வைகை ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. பெருவெள்ளத்தால் அனை உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. அப்போது பாண்டிய மன்னன், வீட்டிற்கு ஒரு ஆள் அணையை கட்ட வர வேண்டும் என கட்டளையிடுகிறார்.
மன்னரின் ஆணைப்படி அனைவரும் அணையை அடைத்து கொண்டிருகின்றனர். அப்போழுது வயதான பாட்டி தன் வீட்டில் ஆண் வாரிசு இருந்தால் மன்னரின் ஆணையை நிறைவேற்றி இருக்கலாம், தனது வீட்டில் ஆண் வாரிசு இல்லையே என வருந்தினார். வயதான கிழவியின் வேதனையை போக்க சிவபெருமான் மனித உருவில் கிழவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது கிழவிவைத்திருந்த புட்டை சாப்பிட கேட்கிறார். புட்டை சாப்பிட்ட சிவபெருமானிடம் தன் சார்பில் அணையை அடைக்க வேண்டும் என கூறுகிறார் கிழவி.அணையை அடைக்க சென்ற சிவபெருமான் விளையாடிக் கொண்டே உறங்கிவிடுகிறார். அணை கட்டுவதை பார்வையிட வந்த பாண்டிய மன்னன் அனை கட்டுவதைவிட்டு தூங்குகிறாயா என பிரம்பால் அடிக்கிறார். சிவபெருமான் பட்ட அடி உலக உயிரினத்திற்கும் உணரப்படுகிறது. இதை உணர்ந்த மன்னன் சிவபெருமானை வணங்குகிறார். சிவபெருமான் ஒரு கையால் மண்ணை அள்ளி வீச அணை அடைக்கப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவம் நடத்தப்படுகிறது. இதில் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து செல்லும் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன், தீபாராதணை நடந்தது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் தனி அதிகாரி ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிப்பட்டனர்.