பதிவு செய்த நாள்
01
செப்
2015
12:09
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்ச்சையாக கொண்டாடுவதற்கு, பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடு முழுவதும், வரும் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் ஒரு அடி முதல் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தய õரிக்கப்பட்டு வருகின்றன. களிமண் மற்றும் சுட்ட மண் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1000 வரையிலும், 4 அடி முதல் 8 அடி வரையிலான பேப்பர் அட்டையுடன் கிழங்கு மாவு கலந்து செய்த விநாயகர் சிலைகள் ரூ. 100 முதல் ரூ.15 ஆயிரம் வரை என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சிங்கம், மான், ஆஞ்சநேயர், மயில், மூஞ்சுறு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்தவாறு மாதிரிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் அரியணையில் முண்டாசுகட்டி அமர்ந்தபடியும், ஆஞ்சநேயர், நரசிம்மன், விநாயகர் ஆகிய மூன்று தலையுடன் கூடிய புதிய விநாயகர் சி லைகளும் உள்ளன. கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகில் தயாரிக்கப்படும் அதிகளவிலான சிலைகள், மந்தைவெளி, தச்சூரில் ÷ சலம்சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிராம பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தற்போது ஆர்டர் செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலரும், விநாயகர் சிலையினை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.