திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் செப்டம்பர் 5ல் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. செப்டம்பர் 5ம் தேதி மாலை 6 மணிக்கு கிருஷ்ணன் சன்னதி அபிஷேகமும், இரவு 8மணிக்கு இன்னிசையும், இரவு12 மணிக்கு கண்ணன் பிறப்பும் நடைபெறும். செப்டம்பர் 6ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பிரசாதம் வழங்குதல், அன்று மாலை 5:30 மணிக்கு கண்ணன் திருவீதி உலா நடைபெறும். மாலை 6:10 மணிக்கு உரியடி நிகழ்ச்சி நடக்கும். நாலுவட்டகை யாதவர் சங்கம், விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.