காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2015 10:09
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில்கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கிருஷ்ணர் அவதரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நித்ய கல்யாண பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கிருஷ்ணன் குழந்தை வடிவத்தில் காட்சி அளித்தார்.