ஒருநாள், கிருஷ்ணரின் காதலி ராதா துவாரகை வந்தாள். அவளை அவரது மனைவி ருக்மிணி வரவேற்று பாலும் தேனும் கொடுத்தாள். இருவரும் கிருஷ்ணரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் ராதா சென்று விட்டாள். அன்றிரவு கிருஷ்ணருக்கு ருக்மிணி பாத பூஜை செய்தாள். அவரது பாதங்களில் கொப்புளங்கள் இருந்தன. இதைக் கண்ட ருக்மிணி, அது உண்டான காரணத்தைக் கேட்டாள்.இன்று பகலில் ராதாவுக்குக் கொடுத்த பால் சூடாக இருந்தது. அதை அவள் பருகினாள். “அவள் தன்இதயத்தில் பூஜிக்கும், என் பாதங்களில் பாலின்சூடு பட்டு இக்கொப்புளங்கள் உண்டாயின என்றார் கிருஷ்ணர். “பால் சூடாக இருந்ததாக ராதா என்னிடம்சொல்லவில்லையே, என்றாள் ருக்மிணி. “அவளுக்கு எந்த நேரமும் என் சிந்தனை தான். குளிர், சூடு இன்னும் மற்ற உணர்வுகளை உணரும் நிலையில் அவள் இல்லை. எனவே, அவள் அந்த சூடான பாலை சாதாரணமாக குடித்து விட்டாள். பாதிக்கப்பட்டவன் நான் தான், என்று விஷமமாகச் சொன்னார் கிருஷ்ணர். உண்மையறிந்த ருக்மிணி, ராதாவின் கிருஷ்ண பக்தியை எண்ணி வியந்தாள்.