பதிவு செய்த நாள்
08
செப்
2015
11:09
விக்கிரவாண்டி: தொரவி கைலாசநாதர் கோவிலில், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், தற்போது, புதியதாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பணிகள் விரைந்து நடைபெறுவதையொட்டி, இக்கிராமத்தில் கரும்பு காட்டில் எழுந்தருளியுள்ள ஆதி கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவனடியார் கல்யாணி அம்மாள் தலைமையில், சிவனடியார்கள், திருவாசகம் முற்றோதினர். பூஜைகளை, சிவனடியார் சரவணன் செய்தார். நிகழ்ச்சியில், புதுச்சேரி காங்., தலைவர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ., கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சங்கர், ஏனாதிநாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் சரவணன், செயலாளர் முரளிதரன், துணைத்தலைவர் சங்கர், துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் மாலதியம்மாள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.